ஒரு வழியாக எல்லா தடைகளையும் வென்று வெளிவந்த மொட்ட சிவா கெட்ட சிவா படம் கமர்ஷியலாக நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது .
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ் ” பைனான்சியர் போத்ராவால் எல்லோரும் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டோம்.
என் படம் வெளியாகி விட்டது . இனி இன்னொரு படத்துக்கு இப்படி ஒரு கஷ்டம் ஏற்படக் கூடாது . போத்ரா போன்றவர்களிடம் எந்த தயாரிப்பாளரும் படமும் சிக்கக் கூடாது .
இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தை அவசியம் சொல்லியாக வேண்டும் .
படத்தின் இயக்குனர் சாய் ரமணி ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளேன் ‘ என்று சொல்லிக் கொண்டே இருந்தார் .
படத்தின் டைட்டிலில் எனக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்து இருப்பதுதான் அந்த சர்ப்ரைஸ் என்பது இப்போதுதான் புரிந்தது .
நான் ரஜினி சாரை தலைவராக நினைப்பவன் . சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எப்போதும் அவருக்கு மட்டும்தான்.
என் தாயார் பெயரை விட எனக்கு பெரிய பட்டம் இல்லை .
எனவே என் பெயருக்கு முன்னாள் கண்மணி என்று போடும் அர்த்தம் வரும்படியாக எனது பெயர் கே. ராகவா லாரன்ஸ் என்று மட்டுமே இனி வரும் படங்களில் வரும் ” என்றார்