சந்திரமுகி 2 ஐப் பார்த்துப் பாராட்டிய சந்திரமுகி 1 ஹீரோ

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
 
இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘சந்திரமுகி 2’ வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌
 
படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் முன் பதிவு செய்து படத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள்.‌
 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில் வடிவேலுவின் காமெடி, ராகவா லாரன்ஸின் நடிப்பு, சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கணா ரனாவத்தின் பேய் அவதாரம்… ஆகியவற்றால் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தை பிரத்யேகமாக பார்வையிட்டு, பட குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்திருப்பது திரையுலகினத்தினரிடமும், ரசிகர்களிடமும் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *