சாட் பூட் திரீ @ விமர்சனம்

யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து எழுதி அருனச்சாலம் வைத்தியநாதன் இயக்க, சிறுவர்கள் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, சிறுமி ப்ரணிதி , சிநேகா, வெங்கட் பிரபு, சாய் தீனா, அருணாச்சலம் வைத்யநாதன் நடிப்பில் வந்திருக்கும் படம் (இணை திரைக்கதை ஆனந்த் ராகவ்) 

சிறுவர் சிறுமியர் சிலர் நண்பர்கள் (கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா,  ப்ரணிதி) செல்வச் செழிப்பு , படிப்பு  ஆகியவற்றில் மேலோங்கிய மேட்டுக்குடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எளிய குடும்பத்து சிறுவன் ஒருவனுடனும் ( பூவையார்) அவர்களுக்கு நட்பு உண்டு . 
 
சிறுவர்களில் ஒருவனான கைலாஷ் , அம்மாவிடம் போராடி அனுமதி பெற்று நாய் ஒன்றை எடுத்து வளர்க்கிறார்கள். ஒரே பையனான கைலாஷுக்கு அந்த நாய் ஒரு சகோதர உறவு. 
ஒரு நிலையில் பெற்றோர் ஊரில் இல்லாத நிலையில் அந்த நாய் தொலைந்து விட, நாயைத் தேடி எல்லோரும் ஊரெங்கும் அலைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் திருடர்கள் , ரவுடிகள், எளிய நல்ல மனிதர்கள்,  மயக்க மருந்து கொடுத்து நாய்களை உயிரோடு புதைக்கும் அரசு அலுவலர்கள் அவர்கள் சிறுவர்களுக்கு தந்த அனுபவங்கள்.. நாய் என்ன ஆனது சிறுவர்கள் என்ன ஆனார்கள் என்பதே படம். 
 
யூகிக்க முடிந்த திரைக்கதையும் காட்சிகளும். 
 
சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் . யோகி பாபு, சாய் தீனா, காதல் சுகுமார் ஆகியோர் இருக்கிறார்கள். 
ஒரு பக்கம் பிள்ளைகள் வகுப்பில் இந்தி படிப்பதைக் காட்சியில் காட்டுகிறார்கள். சிறுவர்களில் ஒருவனின் அப்பாவான சீக்கியர் தமிழ்ப் பற்று உள்ளவர் என்று ஒரு காட்சியில் கூறிவிட்டு அவரை அப்படியே பேக் பண்ணி அனுப்பி விட்டார்கள் . 
 
அதே நேரம் பணக்கார வீட்டுப் பிள்ளைகளை விட ஏழை பிள்ளைகள் வாழ்வியல் அனுபவம் காரணமாக எதிர்பாராத அனுபவங்களை இயல்பாக சமாளிப்பதைச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது . 
 
ஏழை வீட்டுப் பிள்ளைகளின் சினிமா மோகத்தை மறைமுகமாக சாடும்படி பூவையார் கதாபாத்திரதத்தைப் படைத்துள்ளதும் கவனிக்கத்தக்கது 
வீணை மேலோங்கும் ராஜேஷ் வைத்யாவின் இசை , வண்ணமயமும் குளுமையும் நிறைந்த சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஆறுசாமியின் கலை இயக்கம் ஆகியவை மிக சிறப்பு 
 
இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கலாம் என்றாலும் குழந்தைகள் படம் என்பது பெரிய பிளஸ் . 
 
பல விசயங்களில் ஒரு பக்கப் பாசம்  தெரிந்தாலும், ஆபாசம் இல்லாததைப் பாராட்டலாம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *