தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக அரங்கேறியது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி பேசும்போது, “. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை என நினைக்கிறேன். இப்போதைய ஹைதராபாத் 1948ல் இந்தியாவில் சேர்க்கப்படுவதற்கு முன், முஸ்லீம் நிஜாம் மன்னரால் துர்க்கிஸ்தானாக மாற்றப்படுவதாக இருந்தது. இந்திய அரசால் அது தடுக்கப்பட்டது. எங்கள் வம்சத்தில் என் தாத்தா போராடி மக்களை மீட்ட கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் அந்தப் போராட்டத்தில் தான் உயிர் நீத்தார். இந்தக்கதை ஹைதராபாத் மக்கள் மீது கட்டவிழ்த்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தை, அதிலிருந்து ஹைதராபாத் மீண்டு வந்த கதையை பதிவு செய்யும். இதை எப்படியாவது திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது. இக்கதையை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். “என்றார்.
நடிகர் பாபி சிம்ஹா பேசும்போது,” . முதலில் இந்தக் கதை கேட்ட போது, எனக்கே சரியாக புரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு, எனக்கே தெரியாமல் இருந்தது. இந்த உண்மை பற்றி தேடித் தெரிந்துகொண்டேன். உடனே கண்டிப்பாக இந்தப் படம் செய்கிறேன் என்றேன். உலகத்திற்கு இந்த கதை தெரிய வேண்டும். குடூர் நாராயண ரெட்டி சாருக்கு என் நன்றி. அவர் தாத்தா இந்தப் போராட்டத்தில் போராடி இறந்துள்ளார். அவர் நினைத்தால் ஒரு கமர்சியல் படம் எடுத்திருக்கலாம் ஆனால் 40 கோடியில் இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டுமென, இப்படத்தை எடுத்துள்ளார். இப்படி ஒரு படத்தை உருவாக்க முனைந்த இயக்குனருக்கு நன்றி.
இயக்குநர் யதா சத்யநாராயணா பேசும்போது,” தமிழ் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். மணிரத்னம் சார் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். சுஹாசினி மேடத்திடம் இந்தக் கதையை போனில் சொன்னேன், அவர் என்னைப் பாராட்டினார். இப்படத்திற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னார், அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முழுப் பாத்திரமாக மாறிய பாபிக்கு என் நன்றி. கோலிவுட் தென்னிந்தியாவுக்கு தாய் மாதிரி. ரஸாக்கர் மூலம் அறிமுகமாகும் என்னை இங்கு ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நடிகை வேதிகா பேசும்போது,” இந்தப் படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஹைதராபாத் மாநிலத்திற்கு 1948 ல் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை. வரலாற்றுப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நம் சுதந்திர வாழ்க்கைக்காக எத்தனை மனிதர்கள் தியாகம் செய்துள்ளார்கள், போராடியிருக்கிறார்கள் அவர்களின் கதையை இந்தப் படம் சொல்லும். தயாரிப்பாளர் குடூர் சார் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார், நன்றி. பாபி நேஷனல் அவார்ட் வின்னிங் ஆக்டர். அவரை இந்தப் பாத்திரத்தில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. “என்றார்
இசையமைப்பாளர் பீம்ஸ் பேசும்போது,”என் தாத்தா குடூர் நாராயண ரெட்டி வரலாற்றைக் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் மூலம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு சிறப்பான படைப்பில் நானும் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது “என்றார்.
ஒளிப்பதிவாளர் குசேந்தர் ரமேஷ் ரெட்டி பேசும்போது, ரஸாக்கர் எனக்கு மிக முக்கியமான படம். நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவன், ஆனால் எனக்கே இந்தக்கதை அவ்வளவாகத் தெரியாது. இதில் பணியாற்றியது பெருமை. இந்தக் கதை உங்கள் அனைவரையும் உருக வைக்கும் “என்றார்.
தயாரிப்பாளர் மனோஜ் பெனோ பேசும்போது,”ஒரு காலகட்டத்தில் படங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதாகப் பேசினோம். இப்போது டிரெய்லரே ஒரே மாதிரியாக இருப்பதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த டிரெய்லரே மிக வித்தியாசமாக இருக்கிறது. தயாரிப்பாளர் மிக அர்ப்பணிப்புடன் இந்தப்படத்தை, பிரமாண்டமாக தயாரித்துள்ளார். படக்குழுவினர் தங்கள் உயிரைக் கொடுத்து, படத்தை அட்டகாசமாக எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். “என்றார்.
நடிகர் ராஜ் அர்ஜுன் பேசும்போது,” உங்களால்தான் நாங்கள். நீங்கள் பாராட்டுவதால் நாங்கள் சரியாக பணியாற்றுகிறோம். ஆதலால் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக நான் பிறந்ததாக நினைக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு குடூர் நாராயணன் ரெட்டி சாருக்கு மிகப்பெரிய நன்றி. உயிரைத் தந்து இந்த குழுவினர் படத்தை எடுத்துள்ளார்கள். இது வரலாற்றுப் படம் ,ஆனால் அதில் ஆக்சன், டிராமா எல்லாம் இருக்கிறது அதையெல்லாம் தாண்டி உணர்வுகள் இதில் நிறைந்திருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி.”என்றார். நடன இயக்குநர், நடிகர் ராம்ஜி பேசும்போது,இந்த படத்தில் சின்ன ரோல் தான் ஆனால் பவர்ஃபுல் ரோல் செய்துள்ளேன். இந்த படத்தில் நடிக்க காரணமான சங்கர் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. வரலாற்றில் மறைக்கப்பட்டதை ஒவ்வொரு இந்தியனுக்கும் எடுத்துச் செல்லும் படமாக இப்படம் இருக்கும்.”என்றார்.
நடிகர் சரத் ரவி பேசும்போது, “இந்தப் படத்தை அனைத்து பத்திரிக்கை நண்பர்களும் நல்ல முறையில் எடுத்துச் செல்ல வேண்டும். பாபி அண்ணாவுடன் 3 படங்கள் செய்துள்ளேன். அவர் ஒவ்வொரு படத்திலும் பெயர் கிடைக்குதோ, இல்லையோ உயிரைக் கொடுத்து உழைப்பார். இந்தப் படத்தில் இன்னும் அதிகமாக உழைத்துள்ளார். அவருக்கு இப்படி ஒரு படம் வந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும்.” என்றார்
