இந்தியாவின் முதல் லெஸ்பியன் கிரைம் திரில்லர் , ராம் கோபால் வர்மாவின் காதல் காதல்தான் (DANGEROUS)

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘காதல் காதல்தான்’ . ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
 
Artsee Media மற்றும்  Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி,  தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.  தமிழ் பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர்  சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். 
 
ஒரு கிளாமரான படத்தில் ஹீரோ ஹீரோயின் செய்யும் எல்லா வேலைகளையும் திரையிடப்பட்ட முன்னோட்டம் மற்றும் பாடல்களில் , 
 
லெஸ்பியன் ஜோடி செய்தது.  சொல்லப் போனால் அதுக்கும் மேலே !
நிகழ்வில் நாயகி நைனா கங்குலி  பேசியபோது, “ராம் கோபால் வர்மா சாருக்கு நன்றி, என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற்சியான இந்தப் படத்தில்  நடிக்க வைத்துள்ளார். இந்த மாதிரி கதையை எடுப்பது மிகவும் கடினம். வழக்கமாக நாயகன் நாயகி காதலிப்பார்கள், ஆனால் இதில் இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். இதில் நடிப்பது எனக்கு மிகுந்த  சவாலாக இருந்தது.
 
இந்தப் படம் ஆரம்பித்த போது, நான் ஆண் போல் நடிக்க வேண்டும் என்றார், அதற்காக நான் சில பயிற்சிகளை மேற்கொண்டேன், ஆண்களின் உடல் மொழிகளை பார்த்து கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவர்கள் குற்றம் இல்லை, அது ஹார்மோன் சம்பந்தப்பட்டது. அவர்களின் கதையை சொல்லும் இந்தப்படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”என்றார்.  
நாயகி அப்ஷரா , ”  இங்கு இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு, தமிழில் இந்தப் படம் வெளியாவது மிக மகிழ்ச்சி. காதல் காதல் தான் மூலம் நான் இங்கு அறிமுகமாவது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. இங்கு நிறைய பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். படம் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றியது. இது நம் சமூகத்தில் குற்றமாக பார்க்கப்படுகிறது. ராம் கோபால் வர்மா சாரின் தெளிவான பார்வை என்னை வியக்க வைத்தது.
 
ஓரினச் சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களும் கடவுளின் குழந்தைகள்தான். இது ஒரு கமர்ஷியல் படம், இதில் இரண்டு பெண்களுக்கிடையேயான காதல் இருக்கிறது. பார்வையாளர்கள் அவர்களின் காதலைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இரண்டு ஹிரோயின்களுக்கிடையே டூயட் சாங் இருப்பது இதுவே முதல் முறை. ஒரு புதுமையான படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. ராம் கோபால் சாருக்கு நன்றி. எல்லோரும் படம் பாருங்கள் நன்றி. “என்றார். இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது பேச்சில் , ” இந்தப் படத்தின் ஐடியா எனக்கு வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவம், ஓரினச் சேர்க்கையாளர்களை நாம் பரிதாபமாக தான் பார்க்கிறோம், அரசாங்கமே அனுமதி அளித்தாலும் நம் பார்வை மாறுவதில்லை, ஒரு காதல் ஜோடியை வைத்து நிறைய க்ரைம் திரில்லர் கதைகள் வந்துள்ளது, அதை மாற்றலாம் என்றுதான் இதை எழுதினேன். இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்கு செல்கிறார்கள், அவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது அவர்களின் பிரச்சனை என்ன என்று யோசிக்கும்போது அதனை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம். 
 
ஆண்களைப் பிடிக்காத போதுதான் பெண்கள் லெஸ்பியன் உறவுக்குள் போகிறார்கள்.  பொதுவில் பெண்கள் மென்மையானவர்கள். ஆனால் பிரச்னை செய்ய முடிவு எடுத்து விட்டால் பெண்கள் ஆண்களை விட மோசமானவர்கள். 
இந்தப் படத்தில் முதலில் நைனா கங்குலி இதற்கு தயங்கினார் அவருக்கு ஐடியா பிடித்திருந்தது ஆனாலும் தயக்கம் இருந்தது. அதன் பிறகு ஒப்புக் கொண்டார். படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. இரண்டு ஹிரோயின்களை வைத்து டூயட்  பாடல் எடுப்பதே இந்திய சினிமாவில் வித்தியாசம் தான். நைனா கங்குலி, அப்சரா இருவருக்கும் அவர்களின்  தைரியத்திற்கும் நன்றி. அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. படம் உங்களுக்கு பிடிக்கும் “என்றார் 
 
படத்தில் . ராஜ்பால் யாதவ், காஸி, மிதுன் புரந்தாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
தொழில் நுட்ப குழுவினர் 
——————————-
எழுத்து இயக்கம் –  ராம் கோபால் வர்மா 
ஒளிப்பதிவு –  மல்ஹர்பத் ஜோஷி 
எடிட்டர் –   கமல் ரமடுகு
பாடல்கள்  – பிரவீன் பால்
பின்ணனி இசை – ஆனந்த்
கலை இயக்கம் – மதுகர் தேவாரா
 
குருபரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை வெளியிடுகின்றனர். ஏப்ரல் 8 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *