AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன், ஆரத்தி , காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம்
தலைக்கரை என்ற ஊரில் சாதி மாறித் திருமணம் செய்பவர்களை பேய் ஒன்று பழிவாங்க அந்த ஊருக்கு சில காரணங்களால் அனுப்பப்படும் இளைஞர்கள் அதைக் கண்டு பிடிக்கப் போகிறார்கள் . அதில் ஒருவனின் (மகேந்திரன்) காதலியும் (ஆரத்தி) அதே ஊர்.
அங்கே செல்பவர்களுக்கு நடக்கிற- செல்பவர்கள் நடத்துகிற காமெடியான அல்லது காமெடி மாதிரியான சம்பவங்களே படம்.

இயல்பான கிராமத்துப் படம்
வசனங்களில் சிரிக்க வைக்க முயன்று சில இடங்களில் வெற்றி பெறுகிறார்கள்.
மகேந்திரன் இன்னும் மாஸ்டர் போலவே நடிக்கிறார்.
நண்பர்கள் கவர்கிறார்கள் .
நாயகனின் காதலியை காதலிக்கும் இளைஞர் நடிப்பில் கவனிக்க வைக்கிறார் .
காதலியின் அண்ணனாக வருபவர் நன்றாக நடித்துள்ளார் . அவரது காதலியாக வரும் காவ்யா அழகுப் பதுமை . திரையில் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரிகிறது

திவாரகா தியாகராஜனின் இசை, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு இரண்டும் ஜஸ்ட் பாஸ் . முகேன் வேல் எடிட்டிங் ஜஸ்ட் ஃபெயில்.
சீரியசாக ஆரம்பித்து அப்புறம் காமெடிக்குப் போய் அப்புறம் சீரியஸ் ஆகி அப்புறம் காமெடிக்குப் போய் என்ற திட்டம் ஒகே . ஆனால் ஒட்டுமொத்தமாகவே திரைக்கதை வசனத்தில் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய படம்