சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யேடத் ஆகியோரின் தயாரிப்பில் ரகுமான், பரத், சஞ்சனா தீபு, பினோஜ் வில்யா ராகுல் மாதவ் கோவிந்த் கிருஷ்ணா,சோனாலி சூடன் நடிப்பில் சார்லஸ் ஜோசப் எழுதி இயக்கி மலையாளத்தில் வெளிவந்த படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி உடம்பெல்லாம் சதை வெந்து உருகி, பின் இறுகி அருவருப்பான தோற்றத்துக்குப் போன ஒருவரை (பினோஜ் வில்யா) அவரது மனைவியே வெறுத்து சிறுமியான மகளோடு தனியே போய்விடுகிறார் .
ஒரு விலைமாதுவுக்கும் அவருக்கும் நட்பு ஏற்படுகிறது .
இளம்பெண்ணான மகள் ஜானி ( சஞ்சனா தீபு) பனிமலைக்கு தனியே போன நிலையில் விபத்தில் சிக்க, காப்பாற்ற அப்பா போகிறார் . அவ்வளவு பனியிலும் அங்கே சில உடல் சதை பிய்ந்து அழுகிய பிணங்கள் கிடக்க , அப்படி ஒரு பிணத்தின் மீது மகள் கிடப்பதைக் கண்டு பிடித்துக் காப்பற்றுகிறார் .
விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரி (ரகுமான்) அந்தப் பிணங்கள் ஆபத்தான கிருமிகள் தாக்கி , மிருகமாகி இறந்து போன மனிதர்களின் பிணங்கள். அவற்றின் மீது விழுந்து கிடந்த காரணத்தால் இளம்பெண் உடம்பிலும் கிருமிகள் கலந்திருக்கலாம் . அவளும் மிருகமாகி மற்றவர்களைக் கடித்து கடிவாங்கியவர்களையும் மிருகம் ஆக்கலாம் என்பதால் , மகள் தந்தை இருவரையும் மற்றவர்கள் தொடுகை இல்லாத தனி இடத்தில் தங்க வைக்கிறார் .
சர்வாதிகாரி ஹிட்லர்,, தான் உருவாகிய உயிரியல் அழிவுக் கிருமிகளில் ஒன்று பரவும் வேகத்தைப் பார்த்து இது ஒருநாள் நம்மையே அழிக்கும் என்ற எண்ணத்தில் அந்த உயிரியல் ஆயுதக் கிருமிகளின் தயாரிப்பை முற்றிலும் அழித்து பாதிக்கப்பட்டவர்களை உயிரோடு எரிக்கிறான் . எனவே பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற கண்டு பிடிக்கப்பட்ட மாற்று மருந்தையும் அழிக்கிறான்
எனினும் அந்த உயிரியல் ஆயுதக் கிருமி அடங்கிய சில குடுவைகள் அழியாமல் காப்பாற்றப்பட , இன்னொரு பக்கம் மாற்று மருந்து ஒன்றும் காக்கப்படுகிறது . அந்த மாற்று மருந்தின் பெயரே சமாரா
இரண்டும் இரண்டு திசைக்குப் போய்விட , உயிரியல் ஆயுதக் குப்பியை இமாச்சலப் பிரதேசம் கொண்டு வரும்போது, அது சிலர் கையில் சிக்கி அதில் ஒன்று உடைந்து கிருமி வெளியே பரவி அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடித்துக் கொண்டு சாக, அவர்கள் ரத்தம் பட்டே இன்று இளம்பெண் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது
மகளும் மெல்ல மெல்ல மிருகமாகிக் கொண்டே போக , சிலர் தந்தையை அழைத்து ”உங்கள் மகளை நாங்கள் காப்பாற்றுகிறோம் . பதிலாக இந்த உலகில் நோய்களைப் பரப்ப நீங்கள் உதவ வேண்டும்” என்று கூற நடந்தது என்ன என்பதே படம்
பனி விளையும் இமாச்சலப் பிரதேசத்திந அருமையான லொக்கேஷன்களில் எடுக்கப்பட்ட படம் என்பதே படத்தின் முதல் சிறப்பு . ஒளிப்பதிவாளர் சின்னு சித்தார்த் பணி மிகவும் சிறப்பு .
சில தேடல்கள் ,, வரலாற்று சம்பவங்களோடு கற்பனை கலந்து ஒரு நல்ல கதையை எழுதி , சிறப்பாக படமாக்கியும் இருக்கிறார் இயக்குனர் சார்லஸ் ஜோசப்.
ரஞ்சித் கொதேரியின் கலை இயக்கம், கிராபிக்ஸ் காட்சிகள் அருமை.
கோபி சுந்தரின் பின்னணி இசை படத்துக்கு பெரும்பலம்
சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார் தினேஷ் காசி
தந்தை மகளாக வரும் பினோஜ் வில்யா – சஞ்சனா தீபு சிறப்பாக நடித்துள்ளனர். குழந்தைத்தனம் முதல் மிருகம் ஆவது வரை சஞ்சனா தீபு அசத்தல் நடிப்பு.
சிறப்பு அதிகாரியாக ரகுமான் சிறப்பான நடிப்பு .
யூகிக்க முடியாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் பரத் அருமை
எல்லாம் இருந்தும் பலவீனமான திரைக்கதை , பக்கம் பக்கமான வசனம் பேசியும் எல்லோராலும் விஷயத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத விவரிப்பு இரண்டுமே படத்தின் பலவீனம்
வித்தியாசக் கதை விரும்பிகள் ரசிக்கலாம்
