விட்டல் மூவீஸ் சார்பில் தயாரித்து ராசா விக்ரம் எழுதி இயக்க, காக்கா முட்டை விக்னேஷ், காக்கா முட்டை ரமேஷ், இமான் அண்ணாச்சி, சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிசர் மனோகர் நடிப்பில் மஞ்சுநாத் புகழ் இணை தயாரிப்பில் வந்திருக்கும் படம்
கணவன் இறந்த நிலையில் மகனோடு கஷ்டப்படும் ஒரு பெண்ணை சில காமுகர்கள் தொந்தரவு செய்ய, , சிறுவனான மகனை விட்டு விட்டு உதவிக்கு வரும் நபரோடு ஓடிப் போய் விடுகிறார் அந்தப் பெண் அனாதையாகும் சிறுவன் ஒரு பெரிய குப்பை மேட்டில் குப்பை பொறுக்கி பக்கத்திலேயே தங்கி வாழும் சிறுவர் சிறுமியரோடு சேர்ந்து அங்குள்ள பெண்களின் உதவியால் வளர்ந்து பெரியவன் ஆகிறான் . அங்கு இருக்கும் கால் இல்லாத ஒரு பையன் நெருங்கிய நண்பன் ஆகிறான்
உதவி செய்யும் ஒரு பெண்மணியின் பேத்தி மீது இவனுக்கு காதல் வர , அவளோ சற்றே வசதியான ஒரு காமுக – லாரி டிரைவர் வலையில் விழுந்து கர்ப்பம் ஆகிறாள்.
ஐ டி கம்பெனியில் வேலை செய்வதாக ஊரில் மனைவியிடம் கூறி விட்டு , இங்கே குப்பை பொறுக்கி வாழும் ஒரு நபரின் குடும்பத்துக்கு சிறுவர்கள் உதவ, ஊருக்குப் போன அவர் இறந்து போக , அவர் மகள் சென்னை வந்து இவனை காதலிக்கிறாள்.
கர்ப்பமான முன்னாள் காதலிக்கு நியாயம் கேட்டு இவன் போக , அங்கே நடக்கும் திருப்பங்களும் விளைவுகளுமே படம் .
எளிய மனிதர்களின் வாழ்வை, வறுமையை , பிரச்னைகளை, அபிலாஷைகளை, அவசரப்பட்டு மயங்கி கெட்டுப் போகும் அவலத்தை அக்கறையான காட்சிகளில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் .
காமுகர்களுக்கு பயந்து ஆசைப்படுவனோடு மகனை அம்போ என விட்டு விட்டு, அந்தப் பெண் போகும் காட்சி பதைபதைக்க வைக்கிறது .
சில திருப்பங்கள் சிறப்பு
மறைந்த மக்கள் டாக்டர் ஜெயச்சந்திரன் அவராகவே நடித்து இருப்பது அட ஆச்சர்யம். அவரை வைத்து படத்தின் இறுதியில் வரும் காட்சிகள் நெகிழ்ச்சி.
காக்கா முட்டை விக்னேஷ், காக்கா முட்டை ரமேஷ், சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிறப்பாக நடித்துள்ளனர் .
குப்பைகளில் கிடக்கும் காலாவதி மருந்துகளை விற்று லாபம் பார்த்து பலரின் மரணத்துக்கு கேரக்டரில் காமெடியாகவும் சீரியசாகவும் நடித்து இருக்கிறார் இமான் அண்ணாச்சி. அவரே பாடி ஆடி கவர்ச்சிப் பெண்கள் புடை சூழ உற்சாகமாக நடித்துள்ளார் .
கே வி ராஜன் ஒளிப்பதிவு காட்சிகளின் சூழலுக்கு நியாயம் சேர்க்க ,
ரபி தேவேந்திரனின் பின்னணி இசை காட்சிகள் சொல்லும் உணர்வுகளுக்கு பலம் சேர்க்கிறது
படைப்பின் நோக்கத்தில் பழுதில்லாத படம்