சரித்திரத்தில் ஒரு குறும்பட ஈ

sariththiraththil oru e
sariththiraththil oru ee
சரித்திரத்தில் ஒரு ஈக்கான சந்திப்பு

குறும்படங்களில் இருந்து வரும் திரைப்படங்கள் படங்கள் தோற்கட்டும்…. ஜெயிக்கட்டும்..

.ஆனால் குறும்படங்கள் தங்களுக்கென ஒரு கோட்டையை கட்டிக் கொண்டன என்பது மறுக்க முடியாத உண்மை.

நல்ல குறும்படங்கள் வரும்போது அந்த கோட்டை இன்னும் வலுவாகிறது . அப்படி ஒரு குறும்படம்தான் சரித்திரத்தில் ஒரு ஈ .

அழகான பெண்ணை காதலித்து அம்சமாக வாழ நினைக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கைத் தலையில் கேன்சர் என்ற இடி விழுகிறது .

விஷயம் அறிந்த காதலி காதலை காற்றில் கழுவி விட்டு விலக ,

அப்புறம் அவன் காடு மலை தூர தேசம் ஆன்மிகம் எல்லாம் கடந்து போய் என்ன ஆகிறான் என்பதை

வித்தியாசமாக சொல்லி இருந்தது இந்தக் குறும்படம் .

படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெகுவாக பாராட்டினார் .

sariththiraththil oru e
ஈயை வாழ்த்தும் மனிதர்கள்

இயக்குனர் செல்வராகவன் , நடிகர் தனுஷ் இவர்களின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா “நான் பார்த்த சிறந்த குறும்படம் இது.  படமாக்கல் நடிப்பு இசை எல்லாம் சிறப்பாக வந்துள்ளது.” என்றவர்

“சினிமாவுக்கு இசை ரொம்ப முக்கியம் . நான இளையராஜா இசையில் பதினைந்து படங்களை இயக்கி உள்ளேன் . எனக்கு அவர் சரியான இசையை தரவே இல்லை ” என்று ஒரு போடு போட்டு விட்டுப் போனார் .

சரித்திரத்தில் ஒரு ஈ குறும்படம் எல்லோராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →