விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இளம் போராளியாகக் காட்டி, சிங்கள அரசுக்கு ஆதரவாக கருத்தை ஏற்படுத்தும் புலிப் பார்வை படம் தமிழர்களுக்கு எதிரானது
— என்று பழ .நெடுமாறன் அறிவித்து விட்ட நிலையில், அந்த படத்துக்கு அதரவு தருவதில் இருந்து வைகோவும் பின் வாங்கி விட்ட நிலையில், தொல். திருமா வளவனும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் ,
மேற்படி புலிப் பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்துக்கு எதிராக குரல் கொடுத்த முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்களை ….
படத்தின் தயாரிப்பாளர் பச்சை முத்துவும் சீமானும் வேடிக்கை பார்க்க பாரி வேந்தரின் இந்திய ஜன நாயக கட்சியினர், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் இவர்களோடு புலிப் பார்வை படக் குழுவினர் அனைவரும் சேர்ந்து தாக்கியதன் வீடியோ பதிவுக்கு கீழே சொடுக்கவும்
http://nammatamilcinema.com/wp-admin/post-new.php
உண்மையை திரிக்கும் புலிப் பார்வை படத்தை தடை செய்ய வேண்டும் . மாணவர்களை இழிவாகப் பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் “என்று மாணவர்கள் கோஷம் போட்டதால் நடந்த தாக்குதல் இது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
அவர்களில் ஒருவரான பிரபாகரன் இது பற்றிக் கூறும் போது ” பாலச் சந்திரனை இளம் போராளியாக அநியாயமாக சித்தரிப்பது மட்டுமல்ல…ஒரு காட்சியில் பிரபாகரன் “இது கவுரவத்துக்காக நடக்கும் போர் ” என்று சொல்வது போலவும், புலிகள் இயக்கத்தினர் ஆபாச நடனம் ஆடுவது போலவும் காட்சிகள் வருகிறது . அதனாலதான் எதிர்க்கிறோம் ” என்றார் .
இந்த படத்தை சீமான் ஆதரிப்பதை பார்த்தால் ஒருவேளை சீமான் அந்த ஆபாச நடனத்தை ரசிக்கும் சீமானாக ஆகிவிட்டாரோ என்னவோ .