சிறப்பான சிகிச்சை தரும் சீர்மிகு சித்த மருத்துவர் Dr நித்யா MD siddha.,PhD.,

உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்று நமது தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம். உண்மையான ஆன்மீகம் , மேன்மை மிக்க  அறிவியல்.. இந்த  இரண்டின் துணை கொண்டு பண்டைய சித்தர்கள் உருவாக்கி வளர்த்த இந்த சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள் யாவும்  மூலிகை தாது மற்றும் சீவப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் உணவே உயிர்காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது . எனவே  பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என்பதே சித்த மருத்துவத்தின் பெரும் சிறப்பு. 
 
அதே நேரம் இந்த சித்த மருத்துவத்தை முறையாகப் பயின்று அனுபவம் பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது மிக முக்கியம் . அவர்களால்தான் தீங்கு இல்லாத முறையில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும . 
 
அப்படி ஒரு மருத்துவர்தான்  டாக்டர் நித்யா BSMS.,MDsiddha.,PhD  
 
சித்த மருத்துவத்தை முறைப்படி படித்து பட்டம் பெற்று சித்த மருத்துவத்தின் நுணுக்கங்களையும் தத்துவங்களையும் கற்று, நவீன அறிவியல் முறையுடன் முழுக்க முழுக்க

சித்தர்கள் கூறிய சித்த மருந்துகள் மூலம் நாடி சோதனை முழுமையாக செய்து கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக  சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார் டாக்டர் நித்யா 
 

பஞ்சபூத தத்துவத்தில் இயங்கும் நமது உடலில்  வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட மூன்று தாதுக்கள் உயிருக்கு ஆதாரமாக உள்ளது. இவை தன் அளவில் தேவைக்கு மேல் மாறும்போதுதான் நோய்கள் உண்டாகின்றன. இதனை நாடி பரிசோதனை மூலம் கணித்து அதற்கு ஏற்ற சித்த மருந்துகளை கவனத்துடன் தந்து சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கிறார். 

 
மேலும் இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறைகள் இல்லாமல், ஒவ்வொருவருக்கும் உள்ள உடலமைப்பு, நாடி பரிசோதனை, நோயின் முதல் மூலக் காரணம்கண்டு ,  வாழ்வியல் முறை  வழிகாட்டுதல் வழங்கி ,   உணவு முறைகளைக் கொண்ட உணவுப் பட்டியல்(Diet chart) தந்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சிறப்பான சித்த மருந்துகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறார்.  பல தீராத நாட்பட்ட குணப்படுத்த முடியாத நோய்களை வெற்றிகரமாக குணப்படுத்தி தன்னை நாடி வருவோரை  நோயில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுகிறார் .
நித்யா அளிக்கும்  சித்த மருந்துகள், உணவு முறைகள், இவைகளை சரியாக கடைப்பிடித்தால் கடுமையான தீராத நாட்டப்பட்ட நோயில் இருந்து கூட மிக விரைவில் குணமடையலாம்.
 
குறிப்பாக நாட்பட்ட நோய்களான சோரியாசிஸ் (Psoriasis), வெண்புள்ளி(Vitiligo), வாதம், மூட்டுவாத நோய்கள் , முடக்கு வாதம்(Rheumatoid Arthritis), நடுக்கு வாதம்(Parkinson’s disease), மேலும் பல மருத்துவமே இல்லை என்ற தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இவரது  சிறப்பான  சித்த மருத்துவ சிகிச்சையில்  வெற்றிகரமாக குணமடைந்துள்ளனர் .
 
மேலும் சிறப்பு சிகிச்சையாகCKD (Chronic Kidney Disease) என்று சொல்லப்படும் சிறுநீரக செயலிழப்புக்கான சிறப்பு சிகிச்சைகள் நேர்த்தியாக வழங்கப்படுகிறது .தேர்ந்தெடுத்த உயரிய சித்த மருந்துகள் ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்ட சித்த மருந்துகள், உணவு முறைகள் இவைகளைக்  கொடுத்து  டாக்டர் நித்யா அளிக்கும் சிகிச்சையில்  அளித்து எண்ணற்ற நோயாளிகள் பூரணமாக குணமடைந்து டயாலிசிஸ் இல்லாமல்  ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
 
இதுபோலவே புற்றுநோய்க்கும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மற்றும் மலக்குடல், தொண்டை, பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்களுக்கு சிறந்த சிகிச்சை  இவரிடம் அளிக்கப்படுகிறது புற்றுநோய் வராமலும் தடுப்பு மருந்துகளும் அளிக்கப்படுகிறது. 
 
அதோடு பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சனைகளுக்கும், கர்ப்பப் பையில் ஏற்படக்கூடிய கட்டிகள் தைராய்டு சார்ந்த பிரச்சினைகள் உடல் எடை அதிகரிப்பு ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மை, விந்தணுக் குறைபாடு மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் நிறைந்த சிகிச்சைகள் சித்த மருத்துவத்தின் மூலம் அளிக்கப்படுகிறது.  
 
இது தவிர நரம்பு மற்றும் தசையில் ஏற்படும் நோய்கள் ஆஸ்மா, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள், கல்லீரல் பிரச்சினைகள், தசை சிதைவு நோய், உள்ளிட்ட பிரச்சினைகள் இவைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை  64 வகையான சித்த மருந்துகளின் மூலம் அளிக்கப்பட்டு வருவது Dr.நித்யாவின்  சிறப்பு அம்சமாகும்…
 
நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் கொரியர் மூலமும் அனுப்பப்படுகிறது இதைத் தவிர சிறப்பான காயகற்ப மருந்துகளும் மூலிகை மருந்துகளும் தைல வகைகளும் உடல் கழிவுகளை வெளியேற்றும் சிறப்பு மருந்துகளும் டாக்டர் நித்யா அவர்களின் சிறப்பு மருந்துகளாக  வழங்கப்படுகிறது…
 
நம்பிக்கையான நல்ல சரியான மருத்துவம் மூலம்  நோய் தீர்க்கும் சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளுங்கள் 
 
Dr.R.Nithya MD siddha.,PhD.,
Chennai
 
9443066160
9443077570
8122909206
 
நம்பி அவரிடம் நாடி பார்க்க நீங்கள் உங்கள் கையைக்  கொடுத்தால்….  நோய் நீங்கி குணமாகி ஆரோக்கியமாக வாழ அவர் கை கொடுப்பார் !
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *