அம்மன் , அருந்ததி வரிசையில் கோடி ராமகிருஷ்ணாவின் ‘ சிவ நாகம்’

siva 5

பென் மூவீஸ், பிளாக் பஸ்டர்ஸ் ஸ்டுடியோ மற்றும் இன்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சோகைல் அன்சாரி, தவல் ஜெயந்திலால் காடா , ஷாஹித் குரைஷி ஆகியோர் தயாரிக்க , 

‘குத்து’ ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, டிகந்த், ராஜேஷ், விவேக் உபாத்யாயா , முகுல் தேவ் ஆகியோர் நடிக்க, 
பாரத் பந்த். அம்மன் , அருந்ததி போன்ற — தமிழ் நாட்டில் மொழி மாற்றுப் படங்களாகவும்  வந்து சக்கைப் போடு போட்ட — தெலுங்குப் படங்களை இயக்கிய கோடி ராம கிருஷ்ணா இயக்கத்தில், 
கன்னடம் , தெலுங்கு, தமிழ் , இந்தி ஆகிய  மொழிகளில் வெளிவர இருக்கும் படம் சிவ நாகம் 
பாகுபலி, காஞ்சனா , அருந்ததி உள்ளிட்ட படங்களை வெளியிட்ட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் , இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது 
siva 7
பாகுபலி , நான் ஈ ஆகிய வெற்றிப் படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்து பாராட்டுக்களைக் குவித்த மகுட்டா நிறுவனமே,  இந்தப் படத்திந கிராபிக்ஸ் காட்சிகளையும் அமைத்துள்ளது 
இதுவரை பார்த்திராத மிகப் பெரிய உருவத்தில் இந்தப் படத்தில் சிவ பெருமான் வருகிறார் .
120 அடி நீளத்தில் (கிராபிக்சில்) உருவான பிரம்மாண்டமான   பாம்பு ஒன்று சிவனின் அருள் பெற்று பல மாயாஜாலங்களை செய்யும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. 
படத்தின் சிறு முன்னோட்ட வெளியீட்டு  விழாவில் திரையிடப்பட்ட முன்னோட்டத்தில் , மேற் சொன்ன விசயங்களை நிரூபிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன 
இந்தப் படத்தின் கதைக்காக ஏழு வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா.
siva 6
அதேபோல் இதை படமாக்கவும் 3 வருடங்கள்  எடுத்துக் கொண்டிருக்கிறார்.
 
நிகழ்ச்சியில் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா , தயாரிப்பாளர் இயக்குனர் ஷாஹித் குரைஷி, இவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக,
 ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் , இயக்குனர் லிங்குசாமியும் கலந்து கொண்டு பேசினர் . 
 
ஞானவேல் ராஜா பேசும்போது ” இயக்குனர் கோடி ராம கிருஷ்ணா என்றால் எல்லோரும் அம்மன்,  அருந்ததி படங்களைத்தான் சொல்வார்கள் .
ஆனால் அவற்றுக்கெல்லாம் முன்னால் வந்த அவரது பாரத் பந்த்,  எனக்கு மிகவும் பிடித்த படம் . 
 
இன்றும் அரசியலில் நடந்து கொண் டிருக்கிற பல சம்பவங்களை அவர் அப்போதே  காட்டி இருப்பார் .
siva 2
அப்புறம் அம்மன் அருந்ததி படங்களின் மூலம் உச்சிக்குப் போனார் .
இந்தப் படம் அதையும் விஞ்சும் என்பது படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது தெரிகிறது ” என்றார் . 
இயக்குனர் லிங்குசாமி பேசும்போது ” இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான , ஜெயந்திலால் காடா ,தவல் ஜெயந்திலால் , ஷாஹித் குரைஷி இவர்கள் இல்லாவிட்டால் ,
நான் தயாரித்த ரஜினி முருகன் படம் வெளிவந்திருக்காது . அப்படி எனக்கு பெரும் உதவி செய்தவர்கள் இவர்கள் . நட்புக்காக முழு மூச்சாக உதவுவார்கள் . 
கோடி ராமகிருஷ்ணா சாரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது . நம்ம ஊரில் பாலச்சந்தர், இராம, நாராயணன் ஆகியோர்,
 siva 3
நூறு படங்களை கொடுத்து இருக்கிறார்கள் (‘இறையருள் இயக்குனர்’ கே ஷங்கர் அவர்களும் நூறு படம் இயக்கி இருக்கிறார் ) . 
ஆனால் கோடி ராமகிருஷ்ணா  138 படங்களை இயக்கி இருக்கிறார் . அம்மன் படத்தில் ஊருக்குள் வந்த அம்மனை ஊரிலேயே இருக்க வைக்க,
 ஒரு ஏழைப்பெண் தன்னை மாய்த்துக் கொள்ளும் காட்சியும் , அதை கோடி ராமகிருஷ்ணா இயக்கி இருக்கும் விதமும் என்றென்றும் பாராட்டக் கூடிய ஒன்று . 
அண்மையில் கூட  என்னிடம்  ‘எதாவது நல்ல கதை இருந்தா கொடுங்க சார். அடுத்த படம் ஆரம்பிக்கணும்’னு சொன்னார் .  அபாரமான எனர்ஜி அவருக்கு . இந்தப் படத்தின் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது ” என்றார் . 
கோடி. ராமகிருஷ்ணா தன் பேச்சில்
siva 4
” 138  படங்களை இயக்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம் சினிமா மீது உள்ள பிரியம்தான் . அதுதான் என்னை இயக்க வைத்தது. 
நான் இந்தப் படத்தின் கதையை பிரபல நடிகர் ‘சாஹச சிம்ஹா’ விஷ்ணுவர்தனிடம் முன்பே கூறி இருந்தேன்.
( நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த நடித்த விடுதலை படத்தில்,  ரஜினியின் திருட்டு நண்பராக நடித்து உள்ளார் விஷ்ணுவர்த்தன் )
அனால் படம் எடுப்பதற்குள் அவர் இறந்து விட்டார் . அது எனக்கு பெரிய வருத்தம் . 
இது பற்றி தயாரிப்பாளர் ஷாஹித் குரைஷியிடம் ‘ விஷ்ணுவர்த்தன் சாரை இந்தப் படத்தின் கிளைமாக்சில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன் .
கோடி ராமகிருஷ்ணா
கோடி ராமகிருஷ்ணா
அவர் இறந்து விட்டதால் முடியாமல் போச்சு’ என்று வருந்தினேன். அதற்கு அவர் ‘ நடிக்க வைத்து விட்டால் போச்சு ‘ என்றார் . 
ஆம்! சாஹாச சிம்ஹா விஷ்ணுவர்த்தன்  இந்தப் படத்தில் கிளைமாக்சில் பொம்மையாக இல்லாமல்,  உயிர்ப்பாகவே வருகிறார் கிராபிக்ஸ் மூலம்! ஆக இது அவருக்கு 201ஆவது படம் ” என்றார் . 
இந்த மாதம் பாடல் வெளியீட்டு காண இருக்கும் சிவ நாகம் , ஜூலை மாதம் திரைக்கு வருகிறது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →