துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் தயாரிக்க, யோகி, தேஜ், சுவாதி, சாம்ஸ், தாடி பாலாஜி, கோதண்டம் சந்தோஷ், குமரன் நடிப்பில் கே . ஆர் செந்தில் நாதன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
2018 இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கொரியப்படமான Gonjiam; Haunted Asylum படத்தின் தமிழ் ரீமேக் . கொரியாவில் உள்ள Gonjiam என்ற விடுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான அந்தப் படம் கொரியாவின் மாபெரும் வெற்றி பெற்ற ஹாரர் படம்.
ஒரு ஹாரர் வெப் சீரிஸ் படக் குழுவினர் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்றுக்காக Gonjiam உள்ளே நுழைய அவர்களுக்கு நேரும் அனுபவங்களே அந்தப் படம் .
சிவி 2 படத்தில் அதை ஒரு யூ டியூப் படக் குழு பாழடைந்த மருத்துவ மனைக்குள் நுழைவதாக காட்டி இருக்கிறார்கள்.
மேற்கத்திய சினிமாவில் கருப்பு வெள்ளையில் சற்றே வெளிர் பச்சை கலந்த வண்ணத்தில் எடுக்கப்படும் ஆவி , ஆன்மா , பேய்ப் படங்களுக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்தது . அதே பாணியில் தமிழிலும் கூட படம் வந்திருகிறது . இந்தப் படமும் அதே பாணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவமனை உள்ளே நுழையும் குழுவின் யதார்த்த உரையாடல் ஆரம்பத்தில் சிறப்பாகவே இருந்தது.
பி எல் சஞ்சயின் ஒளிப்பதிவு சிறப்பு. ஓவர் சத்தம் காட்டினாலும் சில சமயம் இசையும் ஒலிக் கலவையும் மிரட்டவும் செய்கிறது.
நடிக நடிகையர் ஓகே .
சாம்ஸ் அந்தக் கால மேடை நாடக பாணியில் பாட்டிலை வாயில்,வைத்து ஒரு துளி கூட திரவம் உள்ளே போகாமல் குடிப்பது போல நடிக்கிறார் . அப்பட்டமாக தெரிகிறது.
சாதாரணமாக ஆரம்பித்து ஒரு நிலையில் கவனம் கவரும் படம் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க வலுவிழந்து போகிறது