ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா , சொன்னால்தான் காதலா, வீராசாமி,
சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகம் ஆன காதல் அழிவதில்லை ஆகிய படங்களை தயாரித்த சிம்பு சினி ஆர்ட்ஸ்,
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தயாரிக்கும் படம் டி.ராஜேந்தரின் இன்றையக் காதல் டா. தமிழ் தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது இந்தப் படம்.
நமீதா வித்தியாசமான டான் வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் பல இளம் நாயக நாயகிகள் மற்றும் நகைச்சுவை நடிகர்களை அறிமுகம் செய்கிறார் ராஜேந்தர் .
இவர்களுடன் ராதா ரவி, இளவரசன், வி டி வி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, தியாகு, ரோபோ ஷங்கர் , மதன் பாபு, ‘கவண்’ ஜெகன்,
‘மைதிலி என்னை காதலி’ சுரேஷ், கூல் சுரேஷ் , நினைத்தாலே இனிக்கும் ராஜப்பா, கொட்டாச்சி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள் .
” இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ற இளமை சொட்டும் காதல் கதை இது ” என்கிறார், கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள், இசை , ஒளிப்பதிவு மேற்பார்வை செய்து , இயக்கும் டி. ராஜேந்தர் .
இணை தயாரிப்பு உஷா ராஜேந்தர் , துணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ் டி. பாரூக் .
இலக்கணப் படி ‘இன்றைய காதல் டா ‘ என்பதுதானே சரி, இன்றையக் காதல் டா என்று எக்ஸ்ட்ரா ஒரு க் வைத்து இருக்கிறாரே என்று பார்த்தால்,
உயிருள்ளவரை உஷா படத்தில் இருந்து தனது படங்களின் பெயர்கள் ஒன்பது எழுத்தில் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் ராஜேந்தர் .
எனவேதான் எக்ஸ்ட்ரா ஒரு க் விழுந்துள்ளது .
ஒருவேளை கதையில் ஏதாவது ஒரு க் வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .