டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில், எஸ் ஆர் பிரபுவின் ‘டாணாக்காரன்’

எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்  தயாரிப்பில் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு- நெடுநல்வாடை அஞ்சலி நாயர்  நடிப்பில் உருவாகியுள்ள “டாணாக்காரன்” டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில்   ஏப்ரல் 8, 2022  அன்று வெளியாகிறது.
 
படத்தின் ட்ரெய்லர் மார்ச் 31 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் அனைத்து சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் தமிழின் அட்டகாசமான மேக்கிங், நடிகர்களின் அற்புத நடிப்பு, இதுவரை பார்த்திராத வித்தியாசமான காட்சிகள் என படத்தின்  ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர். 
 
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சரியான இடத்தை தேடி இயக்குநர் தமிழ், தமிழ்நாடு மற்றும் கேரளா முழுதும்  40 நகரங்களுக்கு மேல் பயணத்துள்ளார்.  ஒட்டுமொத்தக் குழுவும் தீவிரமான முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டது. இறுதியாக, இயக்குனர் வேலூரில் உள்ள ஒரு பள்ளியை தனது கதையின் பின்னணிக்கு ஏற்றதாகத் தேர்ந்தெடுத்தார்.
 
குழுவினர் இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு கடினமாக உழைத்துள்ளனர், இப்படத்தின் அணிவகுப்பு காட்சிகளுக்கு தீவிர பயிற்சி தேவைப்பட்டது. இயக்குனர் சாதாரண நடிகர்களுக்கு பதிலாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், காவலர்கள் மற்றும் போலீஸ் பயிற்றுனர்களை தேர்வு செய்து அக்காட்சிகளில் நடிக்க வைத்துள்ளார். கடின உழைப்பில், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் புதுமுக கலைஞர்கள் பலரை வைத்து வெறும் 50 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் தமிழ்.
 திரைப்பட இயக்குநரும் நடிகருமான லால் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகனைப் போலவே வலுவான லாலின் கதாபாத்திரத்தை வைத்துதான் டாணாக்காரன் திரைக்கதையை முதலில்  உருவாக்கியுள்ளார் இயக்குநர் தமிழ். 
 
பன்முக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்தில் இதயத்தைத் தொடும் பாத்திரத்தில் பாராட்டைப் பெறுவார். நாயகியாக நடிக்கும் அஞ்சலி நாயர் வெறும் காதல் நாயகியாக தோன்றவில்லை, படம் முழுவதும் அவருக்கு  முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
மாதேஷ் மாணிக்கம் இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கியுள்ளார், வெளியீட்டிற்குப் பிறகு, குறிப்பாக அணிவகுப்பு காட்சிகள் அவரது ஒளிப்பதிவு பெரும் பாராட்டுக்களை குவிக்கும். 
 
எடிட்டர் ஃபிலோமின் ராஜ் முழுப் படத்திலும் மிக அற்புதமான பணியினை செய்துள்ளார். படத்தில் ஒரு குறிப்பிட்ட அணிவகுப்புக் காட்சிக்காக எட்டு நாட்கள் இடைவிடாமல் எடிட்டிங் செய்ததன் மூலம் இந்தத் திரைப்படத்தின் மீதான அவரது தீராத அர்ப்பணிப்பு வெளிப்பட்டுள்ளது.
டாணாக்காரனை கச்சிதமாக வடிவமைப்பதில் கலை இயக்குனர் ராகவன் முக்கிய பங்கு வகித்துள்ளார். படப்பிடிப்புக்கான இடங்களைத்ட் தேடித் தேர்வு செய்யும் கட்த்திலும் கூட இயக்குநருடன் , ராகவன் பயணித்து, ஒரு அற்புதமான காட்சி விருந்தைத் தயாரித்து வழங்கியுள்ளார், இதனால் படத்தின் காட்சிகளில் வரும் சிறிய பொருள் கூட திரைப்பத்துக்கான அமைப்பு அல்லாமல் இயற்கையாகத் தோன்றும். 
 
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பங்களிப்பு இந்தப் படத்திற்கு பெரும் தூணாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பிரதி காட்சிகளைப் பார்த்துவிட்டு, இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக 6 மாதங்கள் ஒதுக்கி இசையமைத்துள்ளார்.
 
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட முன்னோட்டம் , போலீஸ் பயிற்சிக்குப் போகும் நபர்கள் உயர் அதிகாரிகளால் நடத்தப்படும்  விதம் பற்றிய காட்சிகளைக் கொண்டிருந்தது இயக்குநர் தமிழ்  படம் குறித்து கூறும்போது.., “என்னுடைய படத்துக்கு இத்தனை ஆசீர்வாதங்கள் கிடைத்திருப்பது என்னைப் போன்ற ஒரு இயக்குநருக்கு மிகவும் பெருமை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்திய ஓடிடி தளங்களில் சிறந்து விளங்கும் முன்னணி ஓடிடி அடையாளமாக மாறியுள்ளது, அத்தளத்தில் சிறந்த திரைப்படங்கள் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு, பரந்த அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. 
 
டாணாக்காரன் திரைப்படத்தின் மீது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆர்வம் காட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கதையின் மீது நம்பிக்கை வைத்த எனது தயாரிப்பாளர்களான S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத் மற்றும் R.தங்க பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. 
 
இந்த ஸ்கிரிப்டை வைத்து நான் பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகியபோது, முதலில் அனைவரும் தயங்கினர், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்யப் பரிந்துரைத்தனர். ஆனால், பொட்டன்ஷியல் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் அத்தகைய மாற்றங்கள் எதையுமே சொல்லவில்லை, இது எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது. 
 
மேலும் எனது இயக்கத்தில் எந்த குறையும் வராமல் இருக்க, அவர்கள் ஒரு பெரிய பட்ஜெட்டை படத்திற்காக  செலவழித்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவரது நடிப்பை பார்வையாளர்கள் விரும்புவார்கள், பெரிதும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். 
 
படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக பலரை கஷ்டப்படுத்தி இருக்கிறேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
 
அஞ்சலி நாயர், லால் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார் மற்றும் இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். ஏப்ரல் 8, 2022 முதல், ரசிகர்களின் பாராட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். 
நடிகர் விக்ரம் பிரபு கூறும்போது,“டாணாக்காரன்’ என்ற தலைப்பே மிகவும் அழுத்தமாக இருந்தது, இந்த ஸ்கிரிப்டை கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன், ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படைப்பாக  இருக்கும். தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களை கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது, ஒரு அற்புதமான அனுபவம். தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லையென்றால், டாணாக்காரன் இவ்வளவு திருப்திகரமான வெளியீட்டைக் கண்டிருக்க முடியாது. 
 
இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து,  மிக அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். பல நாள் மயக்கம் அடையும் நிலை . வேலூர் பக்கம் சூட்டிங் நடந்தபோது அந்த வெயிலும் வறட்சியும் தாங்க முடியாததாக இருந்தது. 
 
டாணாக்காரன் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் வெளியீட்டுக்கு நன்றி. டாணாக்காரன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நாயகி அஞ்சலி நாயர் பேசும்போது, ” இந்தப் படத்தில் நடிக்கும்போது ரத்தமும் வியர்வையும் பலரும் ரத்தமும்  வியர்வையும் சிந்தினோம். படத்தில் பணியாற்றிய நாகேஷ் என்ற காஸ்டியூம் உதவியாளர் மிக நல்ல பையன். ஓடி ஓடி மனம் கோணாமல் பணியாற்றினான் . அவன் இறந்து போய் விட்டான் . அவன் இங்கு இருப்பான் என்று நம்புகிறேன்” என்றவர் கண்ணீர் விட்டு அழுதார் . தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசும்போது, ” படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு  நிறைய நபர்கள் தேவை . சும்மா ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக அல்ல. நல்ல நடிகராக . இந்தப் படத்தின் பெரிய சவால் அதுதான். அதனால்தான் படம் முடிய  காலம்  எடுத்துக் கொண்டது. 
 
என்னைப் பொறுத்தவரை இன்னும் ஆறு மாதங்களுக்கு மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே திரையரங்கில் ஓடும்  என்பது என் கணிப்பு. தவிர டாணாக்காரன் போன்ற வித்தியாசமான படங்களை மொழிகளைக் கடந்து எல்லோரும் பார்க்க வேண்டும் . இந்தக் காரணங்களாலும் வியாபார சுயநலம் காரணமாகவும் படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடுகிறோம் “என்றார் .
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *