தமிழின் முதல் STONER MOVIE ‘சிம்பா’

Simba Movie Stills (12)
மேஜிக் சேர் நிறுவனம் சார்பில் கே.சிவனேஸ்வரன் தயாரிக்க, பரத்,  பிரேம்ஜி, ரமணா, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிக்க, வி.சதிஷ்குமாரின் தயாரிப்பு வடிவமைப்பில் . அரவிந்த் ஸ்ரீதர் என்ற அறிமுக இயக்குனர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் சிம்பா . 
genre எனப்படும் வகை அடிப்படையில் இந்தப் படத்துக்கு இப்போதே ஒரு தனி அடையாளம் உருவாகி விட்டது. 
எப்படி?
கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களைக் கொண்ட கதாபாத்திரங்களைக் கொண்டு–  தவறாகவே சீரியசாகவோ அல்லாமல் — காமெடியாகவோ அல்லது பாசிட்டிவ் ஆகவோ கதை சொல்லும் படங்களுக்கு ஸ்டோனர் படங்கள் என்று பெயர் உண்டு .
Simba Movie Stills (14)
இதுவரை தமிழில் இந்த வகைப் படங்கள் வந்தது இல்லை என்கிறார்கள் . அந்த வகையில் வரும் முதல் படம் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தப் படம் .
அப்படி ஒரு போதையாளர் பாத்திரத்தில் நடிகர் பரத்! தனிமை காரணமாக வாழ்க்கை திசைமாறி கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி அதன் எதிர்விளைவாக எப்போதுமே ஒரு வித HALLUCINATION எனப்படும்– பிரம்மை — மன நோயில் உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்?
அதை இயக்குனர்  அரவிந்த் ஸ்ரீதர் தனது சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரம்மிக்க வைக்கும்படியாக சொல்லியிருக்கிறாராம். இது மட்டும் போதுமா? 
Simba Movie Stills (8)
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். அது  மட்டுமல்ல,  அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும்.
அந்த மொழிக்கு ஒரு விஷுவல் வடிவம் கொடுத்து,  தனது திரைக்கதையின் தனக்கே உரிய BLACK COMEDY’ GENRE’ல் அட்டகாசமாகச் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர். 
அந்த வகையில்தான் இந்த சிம்பா  ஒரு STONER  படம் ஆகிறது .
Simba Movie Stills (18)
படத்தின் கதைப்படி அதீத கஞ்சா பழக்கம் காரணமாக நினைப்பது எல்லாம் நேரில் நடப்பது போல உணரும் நிலைக்கு போய்விட்ட பரத்தின் கண்களுக்கு பிரேம்ஜி நாயாகத் தெரிகிறார் . எனவே நாயின் உடல் மொழிகளோடு நாயின் தோற்றத்தில் நடித்து இருக்கிறார் பிரேம்ஜி . அதோடு பரத்தின் தாத்தாவாகவும் நடித்து இருக்கிறார் பிரேம்ஜி . 
இப்படியாக, பிரேம்ஜியின் முந்தைய படங்களின் கதைக்களத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட –  குழந்தைகள் மனதில் நிற்கும்படியான சவாலான வேடத்தை கொண்ட — கதையாக சிம்பா இருந்ததனால், ஆர்வத்துடன் நடித்தாராம் பிரேம்ஜி .   ஆக, தமிழ் சினிமா உலகம் இதுவரை பார்த்திராத வேறு ஒரு கோணத்தில், வேறு ஒரு தளத்தில் இருந்து இயங்குகிறது சிம்பாவின் கதையமைப்பு .
Simba Movie Stills (19)
“நாயாக நடிப்பதற்காக சாக்குத் துணி போன்ற ஒரு உடை , நாய் போல முக அமைப்பு மற்றும் மேக்கப் எல்லாம் போட்டு நடிக்க வேண்டி இருந்தது. புழுங்கித் தள்ளி விடும் . ரொம்ப சிரமம் .  பொருட்காட்சி அரங்குகளில் கரடி போல மிக்கி மவுஸ் போல உருவம் கொண்ட உடை அணிந்து சிலர் நிற்பார்களே…  அவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது இந்தக் கேரக்டரில் நடித்தபோதுதான் எனக்கு தெரிந்தது ” என்கிறார் பிரேம்ஜி . 
“உண்மையிலேயே எனக்கு இது வித்தியாசமான கேரக்டர் . இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது ‘ என்னங்க இப்படி ஒரு கதை!இதை எப்படி விஷுவலாக புரிய வைப்பீர்கள்?’ என்று சந்தேகமாகக் கேட்டேன். ஆனால் இயக்குனர் அட்டகாசமாக விளக்கியதோடு , அட்டகாசமாக எடுத்தும் இருக்கிறார் . படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருப்பீர்கள் . படம் முழுக்க அவ்வளவு காமெடி ” என்கிறார் பரத். 
Simba Working Stills (4)
ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் பணியாற்றியவர்.  ஒளிப்பதிவில் பிரத்யேக உபகரணங்களை இறக்குமதி செய்தும், புதிய உபகரணங்கள் பலவற்றை உருவாக்கியும் பயன்படுத்தும் தனித்துவமானவர்.  
படத்தில் கிரேன் , டிராலி, ஜூம் எல்லாவற்றையும் பயன்படுத்தி எடுக்க வேண்டிய ஒரு ஷாட்டை மேற்சொன்ன எந்த உபகரணமும் இல்லாமல், கயிற்றில் தொங்கிப் பறந்து நகர்ந்து வளைந்து நெளிந்து திரும்பி சுழன்று எடுத்து இருக்கிறாராம் . இந்த ஒரே ஷாட் படத்தில் சுமார் ஆறு நிமிடம் இடம் பெறுகிறதாம். 
இன்னொரு ஷாட்டை  100 கேமராக்கள் கொண்டு எடுத்து இருக்கிறாராம் . (மேக்கிம் வீடியோ சீக்கிரம் போடுங்க!)
Simba Movie Stills (13)
‘இந்த சிம்பா கதையினை பொறுத்தவரை இயக்குனருக்கும் இவருக்குமான ஒரு சிறப்பு புரிதல்தான் இந்ததிரைப்படத்தின் பலமே.  கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த பல ஒளிப்பதிவு ஜாம்பவான்களில் இவர் நிச்சயமாக ஸ்பெஷல்தான். இனி இவரை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் காம்பினேஷனில் நிச்சயமாக பார்க்கலாம்’ என்கிறது படக் குழு . 
 அப்புச்சி கிராமம் உட்பட  சில படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் படத்துக்கு இசை அமைக்கிறார். சிம்பா படத்தின்  கதைவிவாதத்தில் ஆரம்பம் முதலே பயணிக்கும் இவர் ‘ இயக்குனர் எனக்குக் கொடுத்த சுதந்திரம் என்னை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது ” என்று சந்தோஷப்படுகிறார். 
Simba Movie Stills (9)
“தயாரிப்பாளர் சிவனேஷ்வரனின் முதல் தயாரிப்பாக இருந்தாலும், அவர்  படத்திற்கு தேவையான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் முழு ஈடுபாடுடன் தாராளமாக செய்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நான்  பரீட்சார்த்தமாக செய்துப்பார்க்கும் புதிய காட்சியமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களில் எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தும் படமாக சிம்பா அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” என்கிறார் இயக்குனர் 
கதாநாயகியாக தெலுங்கில் ஹிட்டடித்த வருடு பட நாயகி பானு மெஹ்ரா நடித்து இருக்கிறார்.    ராம் கோபால் வர்மா படங்களில் நடித்த ஸ்வாதி தீக்‌ஷித் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் சில முக்கிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார். 
பரத் , பிரேம்ஜி இருவரையும் அழிக்க நினைக்கும் ஒரு வில்லன் கேரக்டரில் ரமணா நடித்து இருக்கிறார் .
Simba Movie Stills (6)
பவர்ஸ்டார், சீனிவாசன்  லொள்ளுசபா ஸ்வாமிநாதன் ஆகியோரும்  நடித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
இவர்கள் மட்டுமா?  மிருகங்களை நேசிக்கும் ஒரு பிரபல தமிழ் சினிமா ஹீரோயினும்  படத்தில் நடிக்க இருக்கிறார் . அந்த  ஹீரோயின் யார் என்பது சஸ்பென்ஸ். (திரிஷான்னு விஷயத்தை சொல்லி சஸ்பென்சை உடைச்சுரலாமா ?)

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →