ஃபியூச்சர் ஃபிலிம் ஃபேக்டரி இன்டர்நேஷனல் சார்பில் ஏ ஆர் எஸ் சுந்தர் தயாரிக்க,
சந்தோஷ் பிரதாப், ஜெயகுமார், ஜீவா ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், , காதல் கண்ணன், ஐரா அகர்வால், அஜய், அன்மோல் சஞ்சு, ஆஞ்சல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெயதேவ், அருள் , சஹானா ஆகியோர் நடிக்க,
கண்ணன் ரங்கசாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் தாயம்
உருட்டலாமா ? இல்லை உருண்டு விடுவோமா? பார்ப்போம்.
ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு மூன்று பெண்கள் நான்கு ஆண்கள் உட்பட ஏழு பேர் வருகிறார்கள் .
அவர்களை ஒரு அறைக்குள் இருக்க வைக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ” உங்களுக்கு முன்பு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார் .
இந்தப் பதவிக்கு இன்னொருவர் வருவதை விரும்பாத அவரது ஆவி இப்போது இங்கு வரும் . உங்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு நாங்கள் வெளியே போய் விடுவோம் . ஒரு மணி நேரம் கழித்து வருவோம் .
உங்களில் யார் ஒருவர் உயிரோடும் மன நிலை பாதிக்கப்படாமலும் இருக்கிறாரோ அவருக்குதான் பதவி ” என்று சொல்லி விட்டுப் போகிறார்கள் . ஆவி தெரிகிறது .
தவிர, ஒரு மணி நேரம் கழித்து தான் மட்டும் உயிரோடு இருந்தால் மட்டுமே பதவி தனக்கு வரும் என்ற நம்பிக்கையில் ஒருவரை ஒருவர் கொல்லமுயல்கின்றனர் . அவர்களுக்கு ஒரு துப்பாக்கியும் கிடைக்கிறது .
அவர்களது ஞாபக சக்தி பறிபோகிறது ஒருவனின் குளோனிங்கும் அங்கே இருக்கிறது .
ஒரு மணி நேரம் ஆன பிறகு யார் உயிரோடு இருந்தார்?என்பதே படம் .
வித்தியாசமான கதை . கடைசியில் பலவித குணாதிசய கற்பனைக் குறைபாட்டுக்கான (மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்) மன நல சிகிச்சை என்ற ஒரு லாஜிக் சொல்கிறார்கள் .
ஆனால் அதை படம் பார்க்க வரும் ரசிகனுக்கு புரியும்படி சொல்ல வேண்டாமா ?
படத்தில் நடித்துள்ள யாரிடமும் ஒரு மண் சார்ந்த தன்மையோ இயல்போ இல்லை . செயற்கையான நடிப்பு .
சுற்றி உள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அடித்து அழித்து, தான் மட்டும்தான் முன்னேறுவதுதான் கார்பரேட் கலாச்சாரம் என்று சொல்லும் இடத்தில் மட்டும் பாராட்ட வைக்கிறார் .
ஆனால் படமாக்கல் தன்மையிலேயே கார்ப்பரேட் கலாசாரம்தானே தெரிகிறது .
தாயம் … காயம் .



