சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் தயாரிக்க, விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி இருக்கும் படம் தலைவன் தலைவி
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி, நித்யமேனன், பாண்டிராஜ், செந்தில் தியாகராஜன், டி ஜி தியாகராஜன், நடிகர் ரோஹித் ஆகியோர் கலந்து கொண்டனர் .
திரையிடப்பட்ட பாடல் காட்சிகள், படமாக்கல் காணொளி ஆகியவை சிறப்பாக இருந்தன .
பரோட்டா கடை வைத்து நடத்தும் ஒரு கணவன் மனைவியின் சண்டை சச்சரவு , ரொமான்ஸ் சந்தோசம் , இதில் உறவுகளின் விளையாட்டுகள் அதன் விளைவுகள் இதுதான் படம்
செந்தில் தியாகராஜன் பேசும்போது, ” பாண்டிராஜ் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. விஜய் செதுபதியோடு இணைந்தது பெருமைக்குரிய விசயம் . நித்யா மேனன் பிரம்மாதமாக நடித்துள்ளார் . படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .
நித்யா மேனன் , ” நான் மிகவும் பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறேன் . மலையாளத்தில் நடித்து ரொம்ப நாள் ஆச்சு . நான் இருப்பது பெங்களூரில்.பாண்டிராஜ் சொன்ன கதை மிக சிறப்பாக இருந்தது . படம் முடியும்போது இன்னும் சில நாள் ஷூட்டிங் தொடராதா என்று இருந்தது . படம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்
விஜய் சேதுபதி , ” இந்தப் படத்தில் பரோட்டா மாஸ்டராக நடிக்கிறேன். எனக்கும பாண்டிராஜுக்கும் இணையே ஒரு பிணக்கு இருந்தது. அது சரியான சூழலில் இந்தப் படம் அமைந்தது . படத்துக்காக பரோட்டா போடுவதற்கான பயிற்சியை இரண்டு மாதம் (?!?) எடுத்தேன் . நித்யா மேனன் நடிப்பு ராட்சசி. பாண்டியரஜுடன் வேலை செய்வது கஷ்டமான விஷயம் . ஆனால் நன்றாக எடுக்கப்படுவதன் நிறைவும் கிடைக்கும் ” என்றார்
பாண்டிராஜ் தன் பேச்சில் , ” ஒரு பயணத்தின் போது ஒரு டீ கடையில் வேலை செய்து கொண்டிருந்த கணவன் மனைவியை பார்த்தபோது தோன்றிய ஒரு பொறி இந்தக் கதையாக மாறியது .ஆனால் கதை அந்தத் தம்பதியின் கதை அல்ல. இதை சரியான இடத்தில் சொல்ல வேண்டும் என்று முயன்றபோது சத்திய ஜோதி பிலிம்ஸ் போனால் நடக்கும் என்று தோன்றியது . அப்படியே போனேன் . தியாகராஜன் சாருக்கு கதை மிகவும் பிடித்தது . 75 நாட்கள் திட்டமிட்ட படத்தை 72 நாட்களில் முடித்தோம் .
முதல் நாளே விஜய் சேதுபதி நித்யா மேனன் இருவரையும் இரண்டு மலைகள் ஏற வைத்தேன் . படம் முழுக்க டைட் செட்யூல்தான் .காரணம் நான் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் அதிக நேரம் செலவிடுவேன் . ஷூட்டிங் போகும்போது பேப்பர் பக்காவாக இருக்கும் . எனவே வேலை தொடர்ந்து வேகமாக நடக்கும் .எனவே நடிக்கக் கஷ்டமாக இருக்கும் .ஆனால் நடித்து முடிக்கும் போது அவர்களுக்கே நிறைவாக இருக்கும்
நான் ஆங்காங்கே பயணம் போகும்போது வித்தியாசமான பேர்களை மனதில் ஏற்றிக் கொள்வேன் . அதை வைத்தே கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பேன் .
இந்தப் படத்தில் நாயகனின் பெயர் ஆகச வீரன் . அது எழுத்தாளர் இமையம் எழுதிய ஆகாசத்தின் உத்தரவு என்ற சிறுகதையின் நாயகன் பெயர் ஆகும் . தவிர அந்தக் கதையை பணம் கொடுத்து வாங்கி, அந்தக் கதையின் விசயத்தையே படத்தில் ஒரு அங்கமாகவும் வைத்துள்ளேன் (ஆகாச வீரன் என்ற பெயரில் ஜே ஜி சுந்தரம் எழுதிய ஒரு நாவலே இருக்கிறது இயக்குனரே)
கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டுப் பிள்ளை வரிசையில் இந்தப் படம் இருக்கும் ” என்றார்
படம் ஜூலை 25 அன்று திரைக்கு வருகிறது
