எதிரியைத் தேடிப் போகும் ‘தனியொருவன்’

thaniyoruvan 6
ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க , ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா  இயக்கும் படம் தனியொருவன். இதுவரை டைட்டிலில் தனது பெயரை எம்.ராஜா என்று போட்டு வந்த இயக்குனர் ஜெயம் ராஜா , மோகன் ராஜா என்று இந்தப் படத்தில் இருந்து பெயர் மாற்றம் அடைகிறார் . அப்பா பெயர் (எடிட்டர் ) மோகன் என்பதையும் சேர்த்துதான்  இந்தப் பெயர் . தம்பியும் ஜெயம் ரவி என்று அறியப்படும் நிலையில் ஒரு படத்தின் அடையாளத்தை ஏன் இரண்டு பேரும் சுமக்க வேண்டும் என்று கூட இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.

thaniyoruvan 5

தவிர இதுவரை எம் ராஜாவாக ரீமேக் படங்களையே இயக்கிக் கொண்டிருந்தவர இப்போது மோகன் ராஜாவாக , முதன் முதலாக சொந்தமாக கதை எழுதி இயக்கும் படம் இது . படத்தின் கதை  என்ன ?

” சமுதாயத்தில் இப்போது தவறுகள் அதிகம் ஆகி விட்டன. நியாயமாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் பல எதிரிகள் உருவாகிறார்கள் . இன்னொரு பக்கம் சராசரி மனிதர்கள் சந்தோசம் , பணம் இவற்றை தேடிப் போகிறார்கள் . அதை பெறவும் செய்கிறார்கள்.

  ஆனால் அதையெல்லாம் மீறி இன்றைய சமுதாயத்தில் எங்கேயோ எவனோ உட்கார்ந்து கொண்டு நம்மை அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த எதிரி வந்து  நம்மை நேருக்கு நேர் பாதித்த பிறகு அவனை தாக்கி அழிப்பவன்தான் ஹீரோவா ? நான் ஒரு படி மேலே யோசிக்கிறேன் . அந்த எதிரியை என் ஹீரோ அவனே தேடிப் போகிறான் . இது தமிழ் சினிமாவுக்குப் புதுசு .

வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என்றார் வள்ளுவர் . இதை விட அன்பை கண்ணியமாக சொல்ல முடியாது . தனியொருவனுக்கு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார் . இதை விட அன்பை வீரமாகச் சொல்ல முடியாது . இந்தத் தனியொருவன் பாரதியை பின்பற்றுபவன் .” என்கிறார் மோகன்ராஜா .

படத்தின் ஹீரோயின் நயன்தாரா . thaniyoruvan

ஐ பி எஸ் படிப்பை ஒரு சூழல் காரணமாக பாதியிலேயே விட்டு விட்ட — தடய அறிவியல் துறையில் ஆர்வம் உள்ள பெண்ணாக நடித்து இருக்கிறாராம் நயன்தாரா . படத்தின் கதைப்படி நாயகன் தேடிப்போகும் அந்த எதிரியாக நடித்து இருப்பவர் அரவிந்தசாமி . “வில்லன் கேரக்டருக்கு இவ்வளவு அழகான நபரா?” என்றால் ” இன்னிக்கு தீமைதானே ரொம்ப அழகாகவும் கவர்ச்சியாவும் இருக்கு ” என்கிறார் ராஜா .

thaniyoruvan 3

“நல்லவங்க எல்லாம் நல்ல விசயங்களுக்காக ஆசைப்படுறாங்க. கெட்டவங்க எல்லாம் சுயநலத்துக்காக பேராசைப்படுறாங்க. எப்பவுமே ஆசையை விட பேராசைதான் ஜெயிக்கும் . அதனால நான் நல்ல விஷயங்கள் நடக்கனும்னு ரொம்ப பேராசைப் படுறேன் “

” உன் நண்பன் யாருங்கறதப் பொறுத்துதான் உன் கேரக்டர் இருக்கும் . ஆனால் உன் எதிரி யாருங்கறதப் பொறுத்துதான் உன் கெப்பாசிட்டி புரியும்.”

thaniyoruvan4

— இப்படிப் பல வசனங்களை படத்துக்காக எழுத்தாளர்கள் சுபாவும் மோகன் ராஜாவும் சேர்ந்து எழுதி இருக்கிறர்களாம் .

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்களும் ராம்ஜி ஒளிப்பதிவில் காட்சிகளும் நன்றாக வந்திருப்பது , ராஜா போட்டுக்காட்டிய ஒரு பாடலைப் பார்க்கும்போது தெரிந்தது

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →