உகேஸ்வரன் தயாரிப்பில் நாசர் , ஜெயக்குமார், தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, யாமினி, தாரணி, மாசிஹா சபீர் நடிப்பில் முகமது ஆசீப் ஹமீத் எழுதி இயக்கி இருக்கும் படம்.
காட்டுக்குள் வேகுகாலமாக இருக்கும் ஒரு கட்டிடம். கொலை செய்யப்பட்டவர்களை சமூக விரோதிகள் புதைக்கப் பயன்படுத்தும் இடம் என்று பலகாலம் போலீசாலும் மற்றவர்களாலும் நம்பப்பட்ட அந்த இடத்தில் அதை விட பல வேலைகள் உண்டு .
தீய சக்திகளின் தலைமையான கடவுளை வணங்கி அதற்கு பலம் தந்து பல தீய சக்திகளை மனிதர்கள் மீது ஏவி அப்படி ஏவப்பட்ட நபர்கள் மூலம் அவர்கள் அதிகம் நேசிக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களையே கொல்ல வைத்து , மனித இனத்தை அழித்து நல்ல கடவுள்களின் சக்தியை குறைத்து தீய சக்தியின் பலத்தைப் பெறுக்கி அதன் கையில் உலகைக் கொண்டு வர,
witch craft எனப்படும் சூனியம் வைப்பது , black magic எனப்படும் கண்கட்டு வித்தை போன்றவற்றை ஒரு குழு பயன்படுத்துகிறது
அதை ஒரு இன்ஸ்பெக்டர் (ஜெயக்குமார்) கண்டு பிடிக்கிறார் . அவருக்கு ஒரு பாதிரியார் (நாசர்) ஆலோசகராக இருக்கிறார் .
நடந்தது என்ன என்பதை சம்மந்தப்பட்ட போலீஸ்காரரிடம் ஓர் உயர் பெண் போலீஸ் அதிகாரி விசாரணை செய்ய அவர் சொல்வதே படம்.
அகாலி என்றால் சராசரிக்கும் அப்பாற்பட்ட சக்தி ஏறியதால் கல் போன்ற திடம் கொண்ட நபர்களாக மாறிய மனிதர்கள் என்ற ரீதியில் விளக்கம் சொல்கிறார்கள்.
பேரு எல்லாம் நல்லாதான் இருக்கிறது
ஆனால் எடுத்த விதம்தான் பொறுமையை சோதிக்கிறது . இரண்டு மணி நேரம் 25 நிமிடம் ஓடும் படம் இரண்டு பட நீலத்துக்கான உணர்வை கொடுக்கிறது . பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . அல்லது மெதுவாக காட்சிகளால் யானையை பூனை பின்னால் இருந்து தள்ளுவது போல படத்தை நகர்த்துகிறார்கள் .
இந்தக் கொடுமை போதாது என்று ஸ்வயம் சித்தா வேறு வம்படியான குளோசப்களில் சொந்தக் குரலில் பேசுகிறேன் என்ற பெயரில் தமிழைக் கடித்துக் குதறி எக்ஸ்ட்ரா கடுப்பு ஏற்றுகிறார்.
அனிஷ் மோகனின் பின்னணி இசை, தோட்டா தரணியின் கலை இயக்கம், கிரி மர்பியின் ஒளிப்பதிவு இவையும் சில நடிகர்களின் முகத் தோற்றமும் கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பதும் மட்டுமே ஆறுதல் .
மற்றபடி ஒரு விசயத்தை வெள்ளித் திரைக்கு எப்படிச் சொல்ல வேண்டும் என்ன வேகத்தின் என்ன தெளிவோடு சொல்ல வேண்டும் என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்