நிஜத்திலும் படத்திலும் அண்ணன் தம்பி

IMG_0157

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம்  இணைந்து  வழங்க,  ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாக,  கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்க,

ஜெயன் , தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்க,  அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கிய சுரேஷ்சண்முகம் இயக்கும் படம்  ‘திருப்பதிசாமி குடும்பம் ‘                           

ஒளிப்பதிவு   –  Y.M.முரளி , இசை   –  சாம் டி.ராஜ் , எடிட்டிங்   –  ராஜா முகமது , நடனம்   –  தினேஷ், ஹபீப் , ஸ்டன்ட்   –  பயர் கார்த்திக்

இணை தயாரிப்பு  –  திருப்பூர்  K L K.மோகன் , தயாரிப்பு  –      பாபுராஜா, B.ஜாஃபர் அஷ்ரப்          

IMG_0209

படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறும்போது ”சூப்பர் குட் பிலிம்ஸில் 25 வருடம் தயாரிப்பு நிர்வாகியாகவும், கபாலியில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்த நான்,

 முதன் முதலாக எனது மகன்களை கதாநாயகர்களாக வைத்து படத்தை முடித்து U சர்டிபிகேட் வாங்கி சென்சார் குழுவினரால் பாராட்டையும் வாங்கிவிட்டேன்.

நான் ஏற்கெனவே அரசு, சத்ரபதி என்று இரண்டு படங்களை எடுத்திருக்கிறேன். இந்த படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.

 நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப படமாகவும், ஜனரஞ்சகமான படமாகவும் இருக்கும். நாம் நமது வீட்டுக்கு பக்கத்தில் எதிரில் பார்க்கிற சராசரி அப்பா தான் திருப்பதிசாமி.

DSC_3984

பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் ஓடிப் போய் உதவி செய்யும் குணம். தன்னுடன் வேலை செய்யும் ஒருவனது பிரச்சனைக்கு,

 ஆதரவு தரும் அன்புள்ளம் கொண்ட அமைதியான அவருக்கு மனைவி மகன்கள் மகள் என நேர்மையாக வாழும் குடும்பம். அப்படிப்பட்ட அவர்களுக்கு அதிகார பலம் கொண்ட ஒருவனது அடாவடியால் ஏற்படும் பிரச்சனை.

ஆட்பலம், அதிகார பலம்  கொண்ட அவனையும் அவனது அராஜகத்துக்கு துணை போகும் அரசியல்வாதியையும் மூளை பலத்தால் திருப்பதிசாமியின் மகன்களான இருவரும் எப்படி வெல்கிறார்கள் என்பது தான் கதை.

DSC_4420

திருப்பதிசாமியாக ஜெயன் மகன்களாக எனது மகன்கள்  ஜே.கே ஜெயகாந்த்  நடித்திருக்கிறார்கள். மகன்கள் என்பதற்காக கதையை மீறி எதையும் திணிக்கவில்லை.

கதைக்குண்டான கதாபாத்திரங்களாகத் தான் வருகிறார்கள்”  என்றார் .

படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *