இணைய தளத்தில் பரபரப்பான சினிமா விமர்சனங்களால் பெயர் பெற்ற கேபிள் சங்கர் இயக்க, துவார்.ஜி.சந்திரசேகர் சார்பில் FCS கிரியேஷன்ஸ் தயாரிக்க, .தமன், அருந்ததி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தொட்டால் தொடரும் .உ
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏகப்பட்ட ‘தொட்டால் தொடரும்’ சமாச்சாரங்கள்…..
கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்து நடிகர் எழுத்தாளர் என்று உயர்ந்த நிலையிலும் கேபிள் தொழிலை தொடர்ந்து செய்து கொண்டிருந்தாராம் கேபிள் சங்கர் .
இது போதாது என்று விழாவில் பேசிய பத்ரி ” சங்கரின் அடுத்த படத்திலும் கதாநாயகி அருந்ததிதானாம். அதற்கு காரணம் ‘இந்தப் படத்தில் அருந்ததியின் நடிப்பு என் மனசை தொட்டுடுச்சி ‘ ன்னு என் கிட்ட சொன்னாரு . சில விசயங்கள் எல்லாம் அப்படிதான் தொட்டால் தொடரும் ” என்றார் .
கேபிள் சங்கரின் சினிமா விமர்சனங்கள் பல படங்களை டார் டாராக கிழிக்கும்படி இருக்கும் . இது பற்றிப் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ” என்னைப் பத்தி எல்லாம் கண்ணா பின்னான்னு எழுதி இருக்காரு. முதல்ல போன் பண்ணி என் கிட்ட சொல்லிட்டு அப்புறம் அப்புறம் அப்படியே திட்டி எழுதிடுவாரு. ஆனா இப்ப அவரு இயக்கி இருக்கற இந்தப் படம் அவரே முழுக்க பாராட்டும்படி இருக்கட்டும் ” என்று சப்ஜெக்டை தொட்டு விட்டுப் போக , அடுத்து வந்த பலரும் அதையே தொடர்ந்து பேசினார்கள் .
“விமர்சனம் என்ற பேரில் கிழிச்சு திங்க விட்ட இவரு டைரக்ட் பண்ணி இருக்காரு . இப்போ இவர் படத்தை விமர்சிக்க நான் காத்து இருக்கேன் ” என்றார் இயக்குனர் சீனு ராமசாமி
அதே போல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பேசும்போது ” நான் கேபிள் சங்கர் கிட்ட ‘உங்க படத்தை எதிர்பார்த்து ரிவியூ எழுதற பலபேரு காத்து இருக்காங்க தெரியுமா?;ன்னு கேட்டேன். அதுக்கு அவர் ” என்னை திட்டறதுக்காகவாவது பல பேரு இந்தப் படத்தை பாப்பாங்க இல்ல . அது போதும்’நு சொன்னார் . ஆஹா இந்த ஐடியா நல்லா இருக்கேன்னு தோனுச்சு “என்றார் .
பீட்சா படத்தை இயக்குவதற்கு முன்பு தானே படத்தை தயாரிக்கவும் முடிவு செய்து வியாபார முறைகளை பற்றி தெரிந்து கொள்ள கேபிள் சங்கரைதான் நாடினாராம் கார்த்திக் சுப்புராஜ் . “அப்போ சினிமா வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கேபிள் சங்கர் சொன்ன பிறகுதான் நான் தயாரிப்பே வேணாம் என்ற முடிவுக்கு வந்தேன் ” என்றார் .
ஆடியோவை வெளியிட்டு கேயார் பேசும் போது ” சங்கரனா டைரக்டர் ஷங்கர் முன்னயே பிரபலமா இருக்காரு இப்ப கேபிள் சங்கர் வந்து இருக்காரு .ஆட்டோ சங்கராதான் இருக்கக் கூடாது என்று கலகப்பாக ஆரம்பித்தவர தொடர்ந்து ” இங்கு தயாரிப்பாளர் சந்திரசேகர் 5வது படமாக இதை எடுத்திருக்காரு . 5 படங்கள் எடுத்தும் அவர் சிரிச்சுக்கிட்டு இருக்காரு . . அதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு.
இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டிருப்பது நல்ல அறிகுறியாகத்தெரியுது . இப்போல்லாம் ஆடியோ விழாக்களுக்கு ஹீரோயின் நடிகைகள் வருவதில்லை. நடிகைகள் வந்தாதான் . மீடியாக்காரங்களும் போட்டோவே எடுக்கறாங்க . அது விளம்பரம் ஆகும்
எனவே தாங்கள் நடிச்ச படங்களின் ப்ரமோஷனுக்கு நடிகைகள் வரணும். அதற்கு நேரம் ஒதுணும். தனக்கு வாய்ப்பு கொடுத்த,தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் ஜெயிக்க உதவணும்.
இந்த தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் சிங்கப்பூரிலிருந்து வந்து படம் தயாரிக்கிறார் .இவர் நினைச்சுருந்தா பெரிய நடிகர்களை வைத்துப் படமெடுத்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தன்னால் திரையுலகிற்கு ஏதாவது பங்களிப்பு இருக்க வேண்டும்னு புது படக்குழு புது நடிகர்கள் என்று வைத்து படமெடுத்து இருக்கார். படமெடுக்கும் தயாரிப்பாளர் யாரையாவது புதிதாக அறிமுகம் செய்யணும் அதன் மூலம் திரையுலகிற்குப் பயன்படவேண்டும்.
ஜெயிக்கிறவர்களையே துரத்தி துரத்தி வைத்துப் படமெடுப்ப வர்களை எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமமாகத்தான் சொல்ல வேண்டும். அவர்களால் திரையுலகிற்கு எந்தப் பயனும் இல்ல.சினிமாவை நேசிக்காமல் கண்ணைமூடிக் கொண்டு கேட்கிற தொகையைக் கொடுத்து கால்ஷீட் கேட்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒழியணும். அவர்களால் திரையுலகிற்கு எந்த வளர்ச்சியும் இல்ல.அவர்கள் கதையே கேட்க மாட்டாங்க.
இன்று சின்ன படங்கள் ஓடக் காரணம். நல்ல கதை இருக்கிறது. இயக்குநருக்கு அதைச் சொல்கிற சுதந்திரம் இருக்கிறது. பெரிய நடிகர்கள் பலருக்கும் கதை கேட்கும் சென்ஸ் இல்லை. இப்படிப்பட்டவர்கள் இயக்குநரின் கதையில் தலையிடுகிறார்கள் இதனால் படம் தோல்வியில் முடிகிறது.தயாரிப்பாளரை மதித்து நடிகர் நடிகைகள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். “என்று காட்டுக்காட்டென்று காட்டி .. தாக்கு என்று தாக்கி …
கே ஆர் தொட்டிருக்கும் பல விசயங்களும் நல்லபடியாக தொடரட்டும்