யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவராக ஆகி இருக்கும் நடிகை திரிஷா த்ரிஷா குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டுவர முன்வர வேண்டும் என்கிறார்
இது குறித்து இளைஞர்கள் மத்தியில் த்ரிஷா பேசுகையில் , “2014 முதல் 2016 வரை போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கவனிக்க வேண்டும் .தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி , 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000 , 2015 இல் இது 15000 வழக்குகள் , 2016 இல் 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது .” குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள் , நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்றன. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 % பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் . இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது .
சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர் ,சிறுமியர் ,பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்று இந்திய மக்கள் தொகையில் 40 % சதவிகிதமாக இருக்கும் இளைஞர்கள் முன் வரவேண்டும். குற்றவாளிகளை இவ்வகையான கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும்– பல ஆண்டு காலங்களாக இருந்து வரும்– அமைதி காத்தல் எனும் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும்” என்றார் திரிஷா
