கலைப்புலி S தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ்” இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பினை. . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க.வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது.
இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி அவரோடு வொர்க் பண்றது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார். வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். மக்கள் தான் வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,”இந்தப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டது. வடசென்னை முடித்ததும் வடசென்னை 2 பண்ணலாமா என்று நினைத்தேன். பின் நானும் தனுஷும் இந்தப்படத்தை துவங்க முடிவு செய்தோம்.. பசுபதி கூட வொர்க் பண்ணணும்னு பல படங்களில் நினைத்தேன் தற்போதுதான் முடிந்தது. முதலில் இப்படத்தில் நான் முடிவுசெய்த நடிகர் கருணாஸ் மகன் கென் தான். ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு பாலாஜி சக்திவேல் சார் நடிக்க முதலில் மறுத்தார். பின் சிறப்பாக நடித்துக்கொடுத்தார். நரேன் ஒரு ஸ்ட்ராங்கான ரோல் செய்துள்ளார். கஷ்டங்களில் இருந்து மீண்டு எப்படி வரக்கூடிய ஒரு கேரக்டர் மஞ்சுவாரியாருக்கு.
தனுஷ் எந்த கேரக்டரில் நடித்தாலும் மெனக்கெடுவார். இந்தப் படத்திற்காக அதிக மெனக்கெடலை எடுத்துக்கொண்டார். தேரிக்காடு சூட்டிங் ஸ்பாட்டில் பைட் சீக்வென்ஸுக்காக ரொம்ப சிரமப்பட வேண்டிய இருந்தது. ஆனால் அதை அசால்டாக செய்தார்
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் எப்போதுமே நான் நினைப்பதை அப்படியே செய்து கொடுப்பார். என் கிரியேட்டிவிட்டியை எந்த இடத்திலும் தடை செய்யவே மாட்டார். நானும் ஜிவி பிரகாஷும் வொர்க் பண்ணும் போது ரொம்ப ஜாலியாக இருக்கும். இந்தப்படத்திற்காக நாங்க நிறைய ஸ்டெடி பண்ணோம். படத்தில் ஆர்.ஆர் ரொம்ப புதுசா இருக்கும். ” என்றார்
தயாரிப்பாளர் தாணு
,“தனுஷ் சொன்னதும் இந்தப்படத்தை உடனே துவங்கினேன். வியக்கத் தகுந்த இயக்குநர் வெற்றிமாறன். ஒருநாள் வெற்றிமாறன் போன் பண்ணி தனுஷ் இன்று ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார் என்று சொல்வார். மறுநாள் தனுஷ் போன்பண்ணி, ” சார் வெற்றிமாறன் போல ஒரு இயக்குநரை நீங்கள் பார்க்கவே முடியாது என்பார் . ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன சந்தோசம் என்ன வேண்டும். வெற்றிமாறனை எனக்குத் தந்த தனுஷுக்கு கோடானகோடி நன்றி”என்றார்
இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ,”இந்த வாய்ப்பைத் தந்த தாணு சார் ,வெற்றிமாறன் சார் ,தனுஷ் சார் அனைவருக்கும் நன்றி. ஒரு மண் சார்ந்த படத்தில் வேலை செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் பெரிய அளவில் உழைத்துள்ளார்கள் “என்றார்
மஞ்சுவாரியர்”இந்தப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெசல். முதலில் படம் இப்படி ஒரு பவர்புல் டீமோட களம் இறங்குறது சந்தோஷமா இருக்கிறது .வெற்றிமாறன் படம் என்றால் ரசிகர்கள் காத்திருப்பார்கள். தனுஷின் ரசிகை நான். இவர்கள் அனைவரோடும் வேலை செய்தது நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறது. ” என்றார்