வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேன் விஜய் சங்கேஸ்வர். பயன்படுத்தப்பட்ட டிரக்குகளை வாங்கி தொழிலை ஆரம்பித்த இவர் புதிய உத்திகளோடு நேர்மையாக துணிவாக – குறைந்த லாபம் அதிக வாடிக்கையாளர்கள் என்ற உத்தியில்- வளர்ந்து இந்தியாவின் மாபெரும் ட்ரக்குகள் மற்றும் பேருந்துகளைக் கொண்ட வி ஆர் எல் குழுமத்தின் அதிபராக மாறினார் .
பத்திரிகைத் துறையில் அடுத்துக் களம் இறங்கி ஒரு ரூபாய்க்கு தினசரி நாளிதழைக் கொண்டு வந்தார் . அரசியலில் நுழைந்து எம் பி ஆனார்.
இப்படி அசாதாரணமான சாதனையாளரின் வாழ்க்கையைச் சொல்லும் படம்தான் ‘விஜயானந்த்’ பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய மொழிகளில் வெளியாகிறது.
பெண் இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அவர் லோக்சபா எம் பி ஆக இருந்தார், அப்பொழுதும் நேரம் தவறாமைதான் அவரது பலம். அவரது கடின உழைப்பு அவருக்கு எல்லா துறைகளிலும் பலத்தைக் கொடுத்து இருக்கிறது. அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான். இந்த சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
விஜய் சங்கமேஸ்வராக நடித்திருக்கும் நடிகர் நிஹால் பேசியபோது, “ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள். லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார். அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.”என்றார் .
இயக்குனர் ரிஷிகா சர்மா பேசும்போது, ” மணிரத்னம் சார் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். விஜய் சங்கமேஸ்வர் அவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர் . அவரது வாழ்க்கை வரலாறை- அதுவும் கன்னட சினிமாவின் முதல் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு அளித்த தயாரிப்பாளர் ஆனந்த் சங்கமேஸ்வர் சாருக்கு எனது நன்றி.
விஜயானந்த் திரைப்படம் டிசம்பர் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகிறது.
