விஸ்வாசம் @ விமர்சனம்

ஜி தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் , அர்ஜுன் தியாக ராஜன் இருவரும் தயாரிக்க,
 
அஜித் குமார் , நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், கோவை சரளா நடிப்பில் சிவா இயக்கி இருக்கும் படம் விஸ்வாசம் . 
 
கிராமத்து பெரிய தலைக்கட்டு தூக்குதுரை (அஜித் குமார் ). 
 
அடிதடி மூலம் எங்கும் நியாயத்தை நிலைநாட்டுபவர் . நிறைய உறவுகள் மற்றும் ஊர்மக்களின் அன்பு இவற்றோடு நவீன  ராஜா போல வாழும் வாழ்க்கை . 
 
ஆனால் கிராமத்து கோவில் திருவிழாவில் காப்பு கட்டும்போது தம்பதி சமேதராக வரச் சொல்ல, தனியாக நிற்கிறார் தூக்கு துரை. ஊரே கலங்குகிறது . 
 
மனைவி நிரஞ்சனா (நயன்தாரா) பிரிந்து பொய் மும்பையில் வாழ்வது சொல்லப் படுகிறது . 
 
பிளாஷ்பேக் !
 
கிராமத்துக்கு மருத்துவ முகாம் நடத்த வரும் டாக்டர் நிரஞ்சனா , ஊரில் கெத்தாக நிறைய உறவுகளோடு வாழும் தூக்குதுரை மீது காதல் கொள்ள, கல்யாணம் . ஒரு பெண் குழந்தை . 
 
கட்ட பஞ்சாயத்து பண்ணும் இடங்களுக்கு மகளோடு போகக்  கூடாது என்று எச்சரிக்கிறாள் . இந்த நிலையில் மேல் படிப்புக்க நிரஞ்சனா அமெரிக்கா போக, 
 
இங்கே ஊரில் ஒரு சண்டையில் எதிரிகள் வீசிய அரிவாளின் முனை குழந்தையை காயப்படுத்தி விடுகிறது .
 
ஊருக்கு வரும் நிரஞ்சனா கோவித்துக்கொண்டு மகளோடு மும்பை வந்து செட்டில் ஆக ஓகோ என்று இருக்கிறார் . 
 
பிளாஷ் பேக் முடிய மும்பை வரும் தூக்கு துரையை நிரஞ்சனா புறக்கணிக்கிறார் . அந்த நேரம் பார்த்து மகளை ஒரு கும்பல் கொல்ல முயல , காப்பாற்றுகிறார் . 
 
விளையாட்டில் சாதிக்க விரும்பும் மகளுக்கு பாடி கார்டாக தந்தையையே நியமிக்கிறார் , அப்பா என்று சொல்லக் கூடாது என்ற நிபந்தனையோடு !
 
அதை ஏற்கும்  தூக்குதுரை வேலைக்கு சேர்கிறார் . 
 
மகள் விளையாட்டில் சாதிக்க , தூக்குதுரையால் உதவ முடிந்ததா? அப்பா என்று சொல்லிக் கொள்ள முடிந்ததா?
 
கணவன் மனைவி கட்டிப் பிடித்துக் கொண்டார்களா என்பதே இந்த  விஸ்வாசம் . 
 
முகம் முழுக்க வெள்ளை தாடி , மேல் உதட்டை முழுக்க மறைத்து கீழ் உதட்டிலும் படரும் மீசை …
 
என்றாலும் அதிரடி பலசாலி பேரிளம் வாலிபன் தோற்றத்தில் அஜித் . 
 
அவருக்கே உரிய செட்டப்புகள் கெட்டப்புகள் . சிறப்பு ! மதுரை பாஷையிலும் சமாளித்து விடுகிறார் அஜித்குமார் 
 
பலமுறை பார்த்த கதை .. காட்சிகள்தான் . அடுத்து என்ன வரப் போகிறது என்பது கூட புரியும் . ஆனாலும் அந்த காட்சிகள் வரும்போது
 
நம்மையும் அறியாமல் மனம் நெகிழ்கிறது . அங்கே தான் டைரக்ஷனில் ஜொலிக்கிறார் சிவா . அருமையான படமாக்கல் !
தவிர சில கதைகளை வருடத்துக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் கூட பார்க்கலாம் . அப்படி ஒரு கதை அது . 
 
திரைக்கதையில் பல old is gold உத்திகளை பயன்படுத்தி இருக்கிறார் சிவா உதரணமா நான் உன் கிட்ட கை குலுக்கினா
 
உன்னை அணைக்கணும் போல இருக்குன்னு அர்த்தம் என்ற விஷயத்தை பின்னர் பயன்படுத்தும் விதம் . 
 
அதே நேரம் கணவன் மனைவி சண்டை என்ற அடிப்படைக் கதையில் இருந்து, மெல்ல மெல்ல குழந்தைகளை
வளர்க்கும் முறை என்ற மாற்றத்தை கொஞ்சமும் உறுத்தாமல் எடுக்கும்  விதமும் அழகு . 
 
வசனங்கள் பிரம்மாதம் . அதில் “நீ சிரிச்சுகிட்டு இருக்க . ஆனா சந்தோஷமா இல்ல . சிரிக்கறது வேற .. சந்தோஷமா இருக்கறது வேற ன்னு
 
புரிஞ்சுக்கற வயசு எனக்கு வந்துருச்சிய்யா ” என்று பாட்டி சொல்வது , சிகரம் . இன்னும்  மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்குப்பா. 
 
விருதுக்குரிய வசனங்கள் !
 
படத்துக்கான குணாதிசயம் உணர்ந்து 1980 களின் பாணியில் இமான் கொடுத்து இருக்கும் பின்னணி இசை அபாரம்!
 
வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவு அவ்வளவு அழகு . 
 
அறிந்த கதை தெரிந்த திரைக்கதையில் ரூபனின் படத் தொகுப்பு படத்தின்  வேகம் மற்றும் அழுத்தம் இரண்டுக்கும் தோள் கொடுக்கிறது 
 
சண்டைக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார் திலிப் சுப்பராயன் . 
 
ஆடை வடிவமைப்பு சிறப்பு . 
 
கிராமத்து மனைவி  – மும்பை  டாக்டர் இரண்டிலும் சிறப்பாக நயன்தாரா 
 
தம்பி ராமையா வழக்கம் போல அசத்தல் . விவேக் , ரோபோ ஷங்கர் ஒகே . 
 
முதல் பாதி நம்மளை தூக்காதான் பார்த்தது . ஆனால் இரண்டாம் பாதி துரையாக உயர்ந்து விட்டது 
 
படம் முடியும் போது ஒரு வித நெகிழ்வான நிறைவுக்கு ஆளாகிறது மனசு . 
 
இது அஜித் ரசிகர்களுக்கு (மட்டும்) எடுக்கப்பட்ட படம் அல்ல . பொது மக்களுக்கான படம் . 
 
விஸ்வாசம் … வெற்றியின் ஸ்வாசம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *