இப்போதுதான் ரிலீஸ் ஆன மாதிரி இருக்கிறது சைத்தான். அதற்குள் சூட்டோடு சூடாக எமன் படத்தை தயார் செய்து விட்டார் விஜய் ஆண்டனி . எஸ் !
லைகா புரடக்ஷன்ஸ் , விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் , விஜய் ஆண்டனி , மியா ஜார்ஜ், தியாகராஜன், சார்லி ஆகியோர் நடிக்க,
நான் , அமர காவியம் படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் எமன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் ,
விஜய் சேதுபதி, எஸ் எ சந்திரசேகர், ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புசெழியன், ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா,, ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா, ‘ஐங்கரன்’ கருணாஸ், காட்ர கட்ர பிரசாத், ‘கே ஆர் பிலிம்ஸ்’ சரவணன்,
கிருத்திகா உதயநிதி, இயக்குநர் சசி, இயக்குநர் அறிவழகன், இயக்குநர் மகிழ்திருமேனி, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்,
நடிகர் கலையரசன், நடிகை ரூபா மஞ்சரி மற்றும்‘எமன்’ படத்தின் படக்குழுவினராகிய தயாரிப்பாளர் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ்,
இயக்குநர் ஜீவா ஷங்கர், நடிகர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர் முத்தமிழன்,
நடிகர் சார்லி மற்றும் நடிகர் சுவாமிநாதன் (லொள்ளு சபா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ் எ சந்திரசேகர் மற்றும் ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புசெழியன் ஆகியோர் படத்தின் இசைத் தட்டை வெளியிட, விஜய் சேதுபதி. பெற்றுக் கொண்டார்
திரையிடப்பட்ட முன்னோட்டம் அரசியலுக்கு நுழையும் நாயகன் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை சொல்லும் படம் இது என்று விளக்கியது . பாடல்கள் கண்ணுக்கு விருந்தாக படமாக்கப்பட்டு இருந்தன .
விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு புது மேஜிக் ஜொலிக்கிறது . சபாஷ்
“அற்புதமான காட்சிகளும், நெஞ்சை வருடிச் செல்லும் இசையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். அந்த வகையில்,
ஒரு தயாரிப்பாளராக எனக்கு கதாநாயகனே இசையமைப்பாளராகவும், இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் கிடைத்திருப்பதை எண்ணி, மகிழ்ச்சி கொள்கிறேன். வசனங்களையும் சிறப்பாக எழுதி உள்ளார் ஜீவா சங்கர்
“விஜய் ஆண்டனி பற்றி பேசும்போது எல்லாம் என் மகன் விஜய்யை பற்றி பேசுவது போலவே உணர்கிறேன் ” என்று ஆரம்பித்த எஸ் ஏ சந்திரசேகர் “கதைதான் படத்துக்கு முக்கியம் என்பதை உணர்ந்தவர் அவர் .
“கதைகளை தேர்வி செய்வதிலும் படத்தை உருவாகுவதிலும் மிக கவனமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி ” என்றார் இயக்குனர் மகிழ் திருமேனி
” டிரைலரும் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ” என்றார் நடிகர் கலையரசன்
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது
அடுத்தவன் இடத்தை அப்பாவித்தனமாக ஆக்கிரமித்து பட்டா போடுவது போன்ற அக்கிரமமான செயல் இது .
இதை தடுக்க முடியாமல் தயாரிப்பாளர் சங்கம் வேடிக்கை பார்க்கிறது . காரணம் ஒற்றுமை இன்மை .
இப்படியே போனால் சினிமாத்துறை டி வி சீரியல் போல சுருங்கி விடும் .
என் படத்தை வெளியிடப் போவதாக சொல்லி இருக்கும் அந்த தமிழ் ராக்கர்ஸ் இணைய தள நபருக்கு ஒன்று சொல்கிறேன் .
நீ கண்டிப்பா போடுவ . எனக்கு தெரியும் . ஏன்னா எங்க ஆட்கள் கிட்ட அவ்வளவு ஓட்டைகள் இருக்கு .
ஆனா நீ எங்க இருக்க . உன் பேரு என்னன்னு கூட தெரியாது . ஆனா ஆறு மாசத்துல நீ எங்க இருந்தாலும் உன்னை கண்டு புடிச்சு சட்டத்தின் முன் நிறுத்துவேன் ” என்றார்
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தனது பேச்சில் லைகா புரச்டக்ச்ஹான்ஸ் நிறுவனத்துக்கு ஒரு சநல்ல ஐடியா கொடுத்தார்.
” லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது .
கத்தி படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் , இப்போது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய படமான, ரஜினி சார் நடிக்கும் 2.ஓ படத்தை தயாரித்து வருகிறார்கள் .
இன்னும் நிறைய பெரிய படங்களை அவர்கள் எடுப்பார்கள் . இன்னும் நிறைய சாதிப்பார்கள் .
அதே நேரம் அவர்கள் நிறைய சிறு முதலீட்டுப் படங்களை எடுக்க வேண்டும் . ஒரு பெரிய படத்துக்கு செய்யும் செலவில் அவர்கள் முப்பது நாற்பது சிறப்பான சிறு முதலீட்டுப் படங்களை எடுக்க முடியும் .
தயாரிப்பில் அனுபவம் உள்ள எங்களைப் போன்ற நபர்களிடம் அப்படி ஒவ்வொரு படத்தையும் ஒப்படைத்து நல்ல படங்களை அவர்கள் எடுத்தால் தமிழ் சினிமா மேலும் சிறப்பான நிலையை அடையும் .
லைக்கா புரடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கும் நல்ல பெயர் கிடைக்கும் . நண்பர் ராஜு மகாலிங்கம் இது பற்றி யோசிக்க வேண்டும் ” என்று சொல்ல அதை கூர்ந்து கவனித்தார் லைக்கா புரடக்ஷன்ஸ் ராஜு மகாலிங்கம் .
தொடர்ந்து பேசிய சிவா ஞானவேல் ராஜா பேசிய விசயத்துகான பதிலாக “ இதுபோல படங்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுக்க முடியாததற்கு காரணம் சங்கங்கள் இல்லை சட்டங்கள்தான் ” என்றார்
“முதலில் ‘எமன்’ படத்தின் கதையை ஜீவா ஷங்கர் என்னிடம் தான் கூறினார், ஆனால் தற்போது அந்த கதைக்கு கனகச்சிதமாக பொருந்தி இருப்பது விஜய் ஆண்டனிதான்
வாழ்த்துகள் !