ஆவணப்படுத்தப்பட்ட ஆவணக் காப்பகம்

anandan 1

தமிழ் சினிமாவின் நூறாண்டு கால தகவல்களைத் திரட்டி வரிசைப்படுத்திப்  பாதுகாக்கும் காவலனாக  திகழ்ந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

தமிழ் நாட்டின் முதல் மவுனப் படமான கீசக வதம் படத்தை எடுத்த நடராஜ முதலியாரை தேடிச் சென்று புகைப்படம் எடுத்தது முதல் அவர் திரட்டிப் பாதுகாத்த தமிழ் சினிமா தகவல் பொக்கிஷங்கள் கொஞ்ச நஞ்சமல்ல

தள்ளாடாத வயதிலும் தள்ளாடாமல் தன் பணியை செய்தவர் அவர் .

தமிழ் சினிமாவின் ஆவணங்களை ஆணவம் இன்றி திரட்டிப் பாதுகாத்த அவரைப் பற்றிய சிறப்பு மலர் ஒன்றை தொகுத்து வெளிக் கொண்டு வந்திருக்கிறார், 

வண்ணத்திரை சினிமா வார இதழின் தலைமை செய்தியாளர் நெல்லை பாரதி

anandan 3

ஆனந்தனின் சிறப்புகள் , அவர் செய்த சாதனைகள் , அவரது பணிக் காதல் , அவருக்கு சினிமாவும் அரசும் செய்தது செய்யத் தவறியது என்று பல்வேறு தகவல்கள் சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகளை

பத்திரிகையாளர்கள் , சினிமா பிரமுகர்கள் பலரும் எழுதி உள்ளனர் . (துறைத் தகப்பன் என்ற பெயரில் நாம் எழுதிய கட்டுரையும் இதில் உண்டு )

எழுதிய  ஒவ்வொருவரின் பெரிய அளவு புகைப்படம் ,பெயர் , பணி நிலை , மின்னஞ்சல் போன்றவற்றை எல்லாம்  குறிப்பிட்டு,  எழுதியவர்களை சிறந்த முறையில் நெல்லை அங்கீகரித்து இருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம் .

நினைக்கும் போதெல்லாம் மனதுக்குள் மலர்ந்து மணம் வீசும் மலர் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *