கேரளாவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் தொழில் அதிபர் குடும்பம் மரிகர் குடும்பம்.
இவர்களுக்கு சொந்தமான மரிகர் பிலிம்ஸ் மலையாளத்தில் மிகவும் பிரபலமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்.
இந்த மரிகர் பிலிம்ஸ் நிறுவனம் மரிகர் ஆர்ட்ஸ் என்ற பெயரில் தமிழில் முதன் முறையாக படத் தயாரிப்பில் அடியெடுத்து வைக்கிறது. பெயரிடப்படாத முதல் தயாரிப்பான இந்தப் படத்தை ஹாஷிம் மரிகர் இயக்குகிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தம்பி மகனான மக்பூல் சல்மான் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மக்பூல் சல்மான் மலையாளத்தில் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் சர்ச்சையைக் கிளப்பிய ‘ஹேட் ஸ்டோரி’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த பவுளி டாம் இப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்
கன்னடத்தில் 12 படங்களுக்கு மேல் நடித்த பிரபலமான நடிகையான ஹர்ஷிகா பூனச்சா மற்றும் சாக்ஷி திவேதி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்
தமிழ் மற்றும் மலையாளத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகரான ரியாஸ் கான் இந்தப்படத்தில் கல்லூரி மாணவராக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
படத்துக்கு ஒளிப்பதிவு சஜித் மேனன் , இசை மன்சூர் அஹ்மத் , படத்தொகுப்பு தமிழின் மிக முக்கிய படத் தொகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் KL ,
கலை அர்கன் ,சண்டை பயிற்சி ரன் ரவி .
தயாரிப்பு நிறுவனம் மரிகர் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர்கள் சுஹைல் ஷேக் மதார் மற்றும் ஷாஜி ஆலப்பாட்.
இதில் சுஹைல் ஷேக் மதார் துபாயிலும் ஷாஜி ஆலப்பாட். அமெரிக்காவிலும் மிகப் பெரிய தொழில் அதிபர்களாக விளங்குபவர்கள்
படத் துவக்க விழாவில் சுஹைல் ஷேக் மதார் பேசும்போது ” இயக்குனர் ஹாஷிம் நல்ல படைப்பாளி . அவர் சொன்ன இந்தக் கதை மிகவும் பிடித்ததால் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன் .
என் நண்பர் ஷாஜி ஆலப்பாட்டும் விரும்பி தயாரிப்பில் இணைந்தார் ” என்றார்
ஷாஜி ஆலப்பாட் தன் பேச்சில் ” சுஹைல் ஷேக் மதார் எதையும் சரியாக செய்பவர் . அவர் செய்யும் விஷயம் தவறாக இருக்காது . அவர் படம் எடுக்கும்போது நாமும் இணைவோம் என்றுதான் வந்தேன் .
ஆனால் கதை கேட்டதும் ரொம்ப சிறப்பாக இருந்தது கண்டேன் .
சந்தோஷமாக படத்தை தயாரிக்கிறோம் ” என்றார்
நாயகன் மக்பூல் சல்மான் பேசும்போது “தமிழில் நாயகனாக அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. மிகச் சிறந்த இக் கதையில் திறமைமிக்க இந்தப் படக் குழுவுடன் பணியாற்றுவது புதிய அனுபவமாக உள்ளது.
படத்தில் என்னோடு நடிக்கும் அனைத்து நாயகிகளும் சிறந்த நடிகைகள். ரியாஸ் கான் அண்ணன் என்னோடு கல்லூரி மாணவராக நடிக்கிறார்.
என்னுடைய பெரியப்பா மம்மூட்டி மாபெரும் நடிகர் மலையாளம் தமிழ் என அனைவரும் அறிந்த மாபெரும் பிரபலம். என்னுடைய அண்ணன் துல்கர் சல்மான்.
அவரும் தற்போது மலையாளம் மற்றும் தமிழில் முன்னணியில் இருக்கிறார்.
என்னுடைய பெரியப்பா மம்மூட்டிக்கும் , அண்ணன் துல்கர் சல்மானுக்கும் அளித்த ஆதரவை , பாசத்தை எனக்கும் நீங்கள் எல்லோரும் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நாயகி ஹர்ஷிகா பூனச்சா தன் பேச்சில் , “மிகச் சிறந்த இந்தக் குழுவுடன் தமிழில் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு.
தமிழ் திரைப்படங்களில் நடித்து நல்ல இடத்தை பிடித்து நயன்தாரா போல் பெரிய நடிகையாக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் சிறப்பான ஒன்றாக அமையும்” என்றார்.
படத் தொகுப்பாளர் பிரவீன் பேசும்போது” எனது கேரளா நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு இந்தப் படத்தின் இயக்குனர் ஹாஷிம் மரிகர் அறிமுகமானார் . என்னிடம் வந்து ஆர்வமாக கதை சொன்னார் .
ஆனால் அந்தப் படம் செயல்பாட்டுக்கு வரவில்லை . மறுபடியும் வருவேன் என்று சொல்லின் விட்டுப் போனார் . சொன்னபடியே வந்தார் .
இந்தக் கதையை சொன்னார் .மிக சிறப்பான கதை . படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது ” என்றார் .
முத்தாய்ப்பாகப் பேசிய இயக்குனர் ஹாஷிம் மரிகர்
” நான் ஒரு மலையாளி. ஆனால் எனக்கு தமிழ் சினிமாதான் ரொம்பப் பிடிக்கும் .
பல மலையாளப் படங்களில் பணியாற்றி இருந்தாலும் தமிழ் சினிமாதான் என் நேசத்துக்குரிய சினிமா .
மலையாளத்தில் படம் இயக்கினால் அது பதினாலு மாவட்டங்களோடு முடிந்து விடும் . தமிழில் இயக்கினால் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒரே நாளில் கவர முடியும் .
எனவே தமிழில் இந்தப் படத்தை எடுக்க வந்துளேன் .
இது பல எதிர்பாராத திருப்பங்கள் உள்ள சுவாரஸ்யமான படம் .இதை முடித்த கையோடு மார்ச் மாதம் பெரிய நடிகர்களை வைத்து,
ஒரு பிரம்மாண்டமான் படத்தை தமிழில் ஆரம்பிக்கிறேன். இந்தப் படத்தின் ஆடியோ விழாவில் அந்தப் படம் பற்றிய விவரங்களை சொல்வேன்.
இப்போதே சொல்கிறேன் . அடுத்த நான்கு வருடங்களுக்கு தமிழ் சினிமாவை விட்டு நகர மாட்டேன் ” என்றார் உற்சாகமும் உத்வேகமுமாய் .
வாழ்த்துகள் !