5 4 3 2 1 .. குறையுது கியூப் ரேட் !

IMG_7305
பானு பிக்சர்ஸ் சார்பில் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரடக்ஷன்ஸ் சார்பில் ஜி.வி.கண்ணன் இருவரும் தயாரிக்க, அர்வின், ஷபீர், பவித்ரா ஆகியோர் நடிக்க…..

 கார்த்திக் சுப்புராஜிடம் பீட்சா படத்தில் இருந்து உதவியாளராக பணியாற்றிய ராகவேந்திர பிரசாத் இயக்கி இருக்கும் படம் 54321 . படத்தின் பெயரே இந்த ஐந்து எண்கள் மட்டும் தான்.

5 நபர்கள் …..   4 வாழ்க்கை முறைகள்       3 கொலைகள் இரண்டே மணி நேரத்தில் … காரணம் 1 பழி உணர்ச்சி!

—  என்று இந்த திரில் படத்தின் பெயருக்கு காரணம் சொல்கிறது படத்தின் அட்டகாசமான சூப்பர் முன்னோட்டம் .

அசத்தலான அந்த முன்னோட்டம் மற்றும் திரையிடப்பட்ட ஒரு பாடல் இரண்டிலும் பானு முருகனின் ஒளிப்பதிவு , ஜோஷ்வா ஸ்ரீதரின் இசை , ரெஜீஷின் படத்தொகுப்பு எல்லாம் சிறப்பாக இருந்தது .

எல்லாவற்றுக்கும் தலைமை வகித்து கம்பீரமாக ஜொலித்தது இயக்குனர் ராகவேந்திர பிரசாத்தின் ஷாட்களும் மேக்கிங்கும் அதில் வெளிப்பட்ட செய் நேர்த்தியும் .

விளைவு? இப்போதே கவனம் ஈர்க்கிறது இந்த 54321

IMG_7210படத்தின் பாடல்களை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட, தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ் தாணு மட்டும் முக்கியப் பொறுப்பாளர்களான டி.சிவா, தேனப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

“நான் கார்த்திக்  சுப்புராஜின் ரசிகன் . இனி அவரது உதவியாளரான ராகவேந்திர பிரசாத்துக்கும் ரசிகன் ஆகிவிடுவேன் போல இருக்கிறது . கார்த்திக் சுப்புராஜின் சிஷ்யன் என்பதை நிரூபித்து இருக்கிறார் ராகவேந்திர பிரசாத் ” என்றார் சிவா .

IMG_7268

“பாடல் காட்சியை மிக அழகாக அறைக்குள்ளேயே வைத்து சிறப்பாக எடுத்து இருக்கிறார் . செலவு எதுவும் இல்லை . பார்க்க ரம்மியமாக இருக்கிறது. தயாரிப்பாளரை காப்பாற்றும் இயக்குனர் இவர்  ” என்றார் தயாரிப்பாளர் ராஜன் .

முதலில் பேசிய இயக்குனர் ராகவேந்திர பிரசாத் ” என் தாய் தந்தை , எனது குருநாதர் கார்த்திக் சுப்புராஜ் , எனது தயாரிப்பாளர்கள் ராஜா மற்றும் கண்ணனுக்கு நன்றி ” என்று பேசி இருக்க ,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது பேச்சில்  , ” நான் யார் கிட்டயும் அசிஸ்டண்டா ஒர்க் பண்ணல. அதனால  எனக்கு ஒர்க் பண்ணின அனுபவம் உள்ள அசிஸ்டன்ட் வேணும் என்பதற்காகவே அவரை அசிஸ்டன்ட் டைரக்டரா வைத்துக் கொண்டேன். ஏனென்றால் அவர் முன்பே சில படங்களில் பணியாற்றி இருந்தார்.

IMG_7294

ராகவேந்திர பிரசாத் எப்பவும் எதுக்கும் ரியாக்ட் பண்ணவே மாட்டார் . அவர் கோபப்படுறாரா ? சந்தோஷப் படுறாரா? எதுவும் கண்டு பிடிக்க முடியாது . அவர் முகத்தைப் பார்த்தா திடீர்னு ‘கன்’ எடுத்துட்டு வந்து சுட்டுட்டுப் போய்டுவார் என்கிற மாதிரியே இருக்கும். ஆனா இப்போ கன்  மாதிரி படம் கொடுத்து இருக்கார்.

நான் படம் பார்த்துட்டேன் . எல்லாரும் நல்லா பண்ணி இருக்காங்க . பிளாஷ் பேக்ல ரெண்டு குட்டிப் பசங்க ரொம்ப சிறப்ப பண்ணி இருக்காங்க. நிச்சயமா இந்தப் படம் வெற்றி பெறும். ராகவேந்திர பிரசாத்துக்கும் மொத்த படக் குழுவுக்கும் என் வாழ்த்துகள்  ” என்றார் .

தயாரிப்பாளர் ராஜன் தனது பேச்சில்  “கியூப்   தொழில் நுட்பத்துக்கு அதிக தொகை கொடுக்க வேண்டி இருப்பதாகவும்  அதற்கு சீக்கிரம் ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசி இருக்க  ,

எஸ் தாணு பேசும்போது  ” கியூப் கட்டணத்தை இரண்டு விதமாக மாற்றி அமைக்க கியூப் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாகி செந்தில் ஒத்துக் கொண்டு இருக்கிறார்.  பெரிய படங்களுக்கு வழக்கமான ரேட் . சிறிய படங்களுக்கு வாரத்துக்கு மூன்று ஆயிரம் ரூபாய் என்று கியூப் ரேட் குறைய இருக்கிறது .

IMG_7270

அதே போல பெரிய படங்களுக்கு தியேட்டர்களில் போடப்படும் விளம்பரங்கள் மூலம் வரும் தொகை இதுவரை கியூப் நிறுவனத்துக்கு மட்டுமே போனது . இனி அந்தத் தொகையையும் மூன்றாகப் பிரித்து  ஒரு பகுதி கியூப் நிறுவனத்துக்கு , இன்னொரு பகுதி தியேட்டர் உரிமையாளருக்கு மூன்றாவது பகுதி தயாரிப்பளருக்கு என்று கொடுக்கப்படுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது ” என்றார் . நல்ல செய்திதான் .

அதே நேரம் தியேட்டர் கட்டணம், அங்கே விற்கப்படும் தின்பண்டங்களின் விலை , பெரிய மால் தியேட்டர்களில் பார்க்கிங்குக்கு வசூலிக்கப்படும் அநியாயத் தொகை .. இவை பற்றியும்  ராஜன் பேசிய பேச்சுக்கு…  எந்தப் பதிலும் இல்லை.

பன்னீர் தெளிக்கணுமோ, என்னவோ ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →