லதா புரடக்ஷன்ஸ் சார்பில் லதா மற்றும் கார்த்திக் தயாரிக்க , சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ் , ரோஷினி , பால சரவணன் மற்றும் சிங்கம் புலி நடித்திருக்கும் படம் A ஏமாலி (பயப்படாதீங்க . தமிழ்ப் படம்தான்)
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட பாடல் ஒன்றில் பால சரவணன் நீ என்ன பெரிய கேனா பூனா வா என்று பாடுகிறார் .
அதற்கு கேன புண்ணாக்கு என்று அர்த்தமாம் . அது கெட்ட வார்த்தை இல்லையாம் . புதுசா ஒரு புண்ணாக்கு வியாபாரி போல!
டிரைலரில் கதாநாயகி தம் அடிக்கிறார் . ஒரு பெண் நேரடியாக கெட்ட வார்த்தை பேசுகிறார் . நல்ல வேளை மியூட் பண்ணி மானம் காத்தார்கள் .
கவிஞர் மோகன்ராஜ் , ” படத்தின் ஒரு பாடலில் சரணம் எல்லாம் சுலபமாக முடித்தும் பல்லவியின் முதல் வரிக்காக பல நாள் காத்திருந்தேன் “என்றார் .
“இந்தப் படத்தில் என் பங்களிப்பு முக்கியமாக இருக்கும்” என்றார் எடிட்டர் ஆர். சுதர்சன் .
“படத்தில் நல்ல வித்தியாசமான ஷாட்கள் வைத்துள்ளோம் ” என்றார் ஒளிப்பதிவாளர் ரதீஸ் கண்ணன் . “தமிழில் எனக்கு இது முதல் படம் . அனைவரின் ஆதரவும் வேண்டும் ” என்றார் நாயகி ரோஷினி .“ரோஷினி மிகச் சிறந்த தோழி ஆகி விட்டார் . அவருடன் நடித்து நல்ல அனுபவம் ” என்றார் இன்னொரு நாயகி அதுல்யா .
சமுத்திரக் கனியுடன் நடித்து மறக்க முடியாத அனுபவம் என்றார்கள் மூவரும் .
சமுத்திரக் கனி வேறு படப்பிடிப்புக் காரணமாக (?) இந்த நிகழ்ச்சியில் கலந்து முடியவில்லை
— என்றார்கள் .