‘அந்தமான்’ படத்துக்காக கடலுக்கடியில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி

andha 1
சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில்,
 பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் அந்தமான்.
கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். 
andha 2
இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன்…
முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி…
மற்றும் கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
andha 3
கானா பாலா ஒரு பாடல் பாடி நடிக்கிறார்.
கதை, வசனம், பாடல்கள் டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதுகிறார்.
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இப்படத்தை இயக்குகிறார். 
andha 8
எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையமைக்க, ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். 
பூமித்தாயை நேசிக்கும் ஒரு புதல்வன் படும்பாட்டையும்,
தேசத்தைக் காப்பற்ற சேதம் விளைவிப்போரை சூறையாடுவதையும், 
 andha 5
களமாகக் கொண்ட இந்தப படத்தின்  கதை ஆரம்பத்தில் தமிழகத்திலும், பின்னர்  அந்தமானிலும் படமாகிறது. 
அந்தமானைச் சேர்ந்த ஏ.கண்ணதாசன் இப்படத்தை,
 இயற்கை எழில் கொஞ்சும் அந்தமானின் முக்கிய பகுதிகளில் தயாரிக்கிறார்.
andha 77
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 
இதில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ஸ்டண்ட் மாஸ்டரும், கில்ட் செயலாளருமான ஜாக்குவார் தங்கம்,
இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், 
andha 6
நடிகர்கள் சரவணன், மன்சூர் அலிகான் மற்றும் ‘அந்தமான்’ படத்தின் நாயகன் ரிச்சர்ட், நாயகி மனோசித்ரா, 
தயாரிப்பாளர் ஏ.கண்ணதாசன், இயக்குநர் ஆதவன் உள்ளிட்ட,
 படக்குழுவினர் ஆகியோர்  கலந்துக்கொண்டார்கள்.
andha 88
படம் பற்றிக் கூறும் இயக்குனர் ஆதவன்” பால் கொடுக்கும் தாயின் மார்பை கடித்துக் குதறி, 
 ரத்தம் குடிக்கும் கொடூர குணம் போல ஆகி விட்டது மனித குலத்தின்  சுயநலம்.
அந்த பூமித் தாயை அழித்துக் கொண்டு இருக்கிறது.
andha 7
இதில் ஆதிக்க சக்திகள் , பணப் பேய்கள், சுயலப் பிசாசுகள் என்று எல்லோருமே ஈடுபடுகிறார்கள் .
தவிர அதற்கு எதிராகக் குரல் கொடுப்போரை  அழிக்கவும் அவர்கள் தயங்குவது இல்லை .  
அப்படி பூமித் தாயை அழிக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிரான,
 andha 888
ஒரு நல்ல  மனம் கொண்ட தனிமனிதனின் போராட்டமும், 
அதில் அவன் வென்றானா இல்லை தோற்றானா என்பதுவுமே , இந்த படம் .
படத்தின் இருபது சதவீதம் சென்னையில் படமாகிறது . மீதிப் படம் முழுக்க அந்தமானில் படமாகிறது .
andha 4
படத்துக்காக அந்தமானில் கடலில் நீருக்கு அடியில் ,
ஒரு பிரம்மாண்டமான  சண்டைக் காட்சியை படமாக்க இருக்கிறோம் . 
அது படத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கும்” என்கிறார் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →