ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிக்க, ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்து திரைக்கதையை எழுதி இணை இயக்குனராகவும் பணியாற்ற, சத்யராஜ், அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் நடிப்பில் மோகன் டச்சு என்பவர் இயக்கி இருக்கும் படம் .
பிரிட்டிஷ் இந்தியாவில் தமிழக பழங்குடி கிராமம் ஒன்றை அழிக்கிறார் பிரிட்டிஷ் அரசி. அந்தக் கிராமத் தலைவனை அவள் கொல்கிறாள்.
மலைக் காட்டில் ராணியும் வசித்து பின் இறந்து சமாதி வைக்கப்பட்ட இடத்தில் இப்போது ஒரு ரிசார்ட் இருக்கிறது . ரிசார்ட் உரிமையாளர் அகால மரணம் அடைந்த நிலையில் அவள் மனைவியும் மகளும் நிர்வகிக்கும் ரிசார்ட் அது . அங்கு இருக்கும் ராணி வசிக்கும் அறையை மட்டும் திறக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது .
அந்த ரிசார்ட்டுக்கு, நல்ல புரிதல் உள்ள ஒரு வயதான தம்பதி, புரிதல் இல்லாத ஓர் இளம் தம்பதி, ஒரு இளைஞன் அவனது இரண்டு தோழிகள், ஒரு பெண் எழுத்தாளர் ஆகியோர் தங்கி இருக்கும் சூழலில், ஒரு பார்ட்டிக்காக ராணி வசித்த அறையைத் திறந்து சுத்தம் செய்து பார்ட்டி கொண்டாட பலரும் குணம் மாறுகிறார்கள். இளம் தம்பதியின் கணவன் , தோழிகளுடன் வந்த இளைஞன், ரிசார்ட் மேனேஜர் ஆகியோர் அடித்துக் கொள்கிறார்கள் .
இளைஞனின் தோழி ஒருத்தியைக் காணவில்லை. பெண் எழுத்தாளர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி. (சத்யராஜ்) .
அவர் விசாரணையின் போதே இளம் கணவன் , இளைஞனின் இன்னொரு தோழி, ரிசார்ட் உரிமையாளர் மகள் இப்படி எல்லோரும் பேய் ஆகிறார்கள் .
பூசாரி ஒருவர், “மீண்டும் ராணி அறை திறக்கப்பட்டதால் ராணியை மீண்டும் பழிவாங்க அங்காரகன் ஜென்மம் கடந்து வந்து விட்டான். அங்கு போன எல்லோரையும் ராணியாக நினைத்துக் கொல்கிறான்” என்கிறார் .
நடந்தது என்ன என்பதே படம்
அட்டகாசமான லொக்கேஷன் . விதம் விதமான பெண் கதாபாத்திரங்கள் அதனால் பொங்கும் கவர்ச்சி இவை ப்ளஸ் .

அடிப்படையில் நல்ல கதை கூட . கிராஃபிக்ஸ், கிளைமாக்ஸ் கூட ஒகே ரகம்தான் .
ஆனால் சுவாரசியம் இல்லாத காட்சிகள், தேவை இல்லாமல் நீளும் காட்சிகள், மிக சாதரணமான மேக்கிங் இவை பெரிய பின்னடைவாகப் போய்விட்டது