‘ஆர்யன்’ திரைப்பட, ‘முன் வெளியீட்டு’ விழா .

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,   விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. 
 
விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன்  மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர். 
 
விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
 
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான  இன்வஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும்  வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 
 
இதை முன்னிட்டு படத்தின் முன் வெளியீட்டு விழா  நடைபெற்றது. 
 
விழாவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர். 
 
எழுத்தாளர் இயக்குனர் மனு ஆனந்த் பேசியபோது, “எனக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ,  அதே போல் ஆர்யன் இயக்குனர்  பிரவீனுக்கு முக்கியமான படம். பிரவீன் என் நண்பர் . விஷ்ணு என் முதல் ஹீரோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹீரோ அவர்தான். பிரவீனும் நானும் கௌதம் மேனனிடம் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தோம். சினிமாவை ஒன்றாக விவாதிப்போம். விஷ்ணு விஷால் கதை கேட்ட போது,  நான் தான் பிரவீனை சிபாரிசு செய்தேன். 
 
இந்தக் கதையை திரைக்கதையாக எழுத பிரவீன் அணுகிய போது மகிழ்ச்சியாக இருந்தது. மிக நல்ல திரைக்கதை. அக்டோபர் 31 படம் பார்க்கும் போது பிரவீன் திறமை உங்களுக்கு புரியும். எஃப்.ஐ.ஆர் படத்தை பலர் தவிர்த்த போது துணிந்து நடித்து தயாரித்தவர் விஷ்ணு விஷால். அவர் இந்தப் படத்தையும் நம்பி தயாரித்துள்ளார். போலீசாக கலக்கியிருக்கிறார். செல்வா சார் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார்! ஷ்ரத்தாவும் சிறப்பாக செய்துள்ளார். ஜிப்ரான் சார் அருமையான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் திரையரங்கில் பாருங்கள் உங்களுக்கு இப்படம் நல்ல அனுபவமாக இருக்கும். “என்றார். 
 
கலை இயக்குநர் ஜெயச்சந்திரன் , “இந்தப் படத்தில் மிக முக்கியமான சீக்குவன்ஸ்க்காக ஒரு பெரிய செட் போட்டுள்ளோம். அனைவரும் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்.”என்றார். 
 
எடிட்டர் ஷான் லோகேஷ் பேசியபோது, “ஆர்யன் மிக முக்கியமான படம், இதுவரை வந்த க்ரைம் சைக்கோ கில்லர் படங்களின் வழக்கத்தையே உடைத்து, புதிதாக ஒன்றை செய்துள்ளது. வில்லனின் ஆர்க்கையே முழுதாக மாற்றியுள்ள படம். விஷ்ணு சார் ஒரு நாள் ராட்சசன் ஷீட்டில் பார்த்த போது ஒரு ஷாட்டில் கண் சிமிட்டியிருக்கிறேன் அதைப் பார்த்து எடிட் செய்யுங்கள் என்றார். அவரது அப்சர்வேசன் அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. அவர் பணத்தை பற்றி எப்போதும்  கவலைப்பட மாட்டார். படம் சரியாக வர வேண்டும் தான் என்பதில் கறாராக இருப்பார். சினிமாவை உண்மையாக காதலிக்கும் ஒருவர். ஜிப்ரான் சார் எங்களுக்கு கிடைத்த வரம். செல்வா சாரின் காதல் கொண்டேன் படம் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் அவர் கண்ணே பல விசயங்கள் பேசும். படம் பார்த்தால் புரியும் அருமையாக நடித்துள்ளார், “என்றார். 
 
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியபோது, “எல்லோரிடமிருந்தும் ராட்சசன் மாதிரி இருக்குமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. ராட்சசன் எனக்கு முக்கியமான படம். ராட்சசனில் வில்லன் யார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கும். அது இசையில் சவாலாக இருந்தது. இதில் வில்லன் யார் எனத் தெரிந்துவிடும், ஆனால் அதன் பிறகு தான் கதை தொடங்கும். செல்வா சார் நடிப்பிற்கு மியூசிக் செய்தது சந்தோசமாக இருந்தது. மியூசிக் நன்றாக தெரியக் காரணம் எடிட்டர் ஷான் தான். எடிட்டிங்கில் இசைக்கு நன்றாக இடம் கொடுப்பார். ரொம்ப கடினமான திரைக்கதையை மிக அழகாக சொல்லியுள்ளார் பிரவீன். . வாய்ப்புத் தந்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. இந்தப் படத்துக்கு ஒரு சவுண்ட் செய்துள்ளேன், ராட்சசனில் இருந்து முற்றிலும் வேறு விதமாக இருக்கும். இப்படம் ஒரு முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். “என்றார். 
 
நடிகர் கருணாகரன் பேசியபோது, ” . ஓஹோ எந்தன் பேபி படத்தின் பாராட்டுக்களுக்கு நன்றி. ஆர்யன், ராட்சசன் கம்பேரிங்கை தடுக்க முடியாது. ஆர்யன் எனக்கு பிடித்த படம். பிரவீன் ரொம்ப காம்ப்ளிகேடட் கதையை பிரில்லியண்டாக எடுத்துள்ளார். விஷ்ணு விஷால் போலீஸ் கதாப்பாத்திரத்தை மிக அட்டகாசமாக செய்துள்ளார். அவர் கடினமான உழைப்பாளி. தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை விஷ்ணுவுடன் இருந்து பார்த்தேன். இந்தப் படத்தில் நியூஸ் ரீடர் ரோல் செய்துள்ளேன், இருப்பதிலேயே கஷ்டமான ரோல். செல்வா சாரின் மிகப்பெரிய ஃபேன். அவர் மிகப்பெரிய ரோல் செய்துள்ளார். எல்லோரும் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். “என்றார். 
 
நடிகை  மானசா சௌத்திரி பேசியபோது, “ஆர்யன் எனக்கு மிக முக்கியமான படம். ஜிப்ரான் சார் ரசிகை நான். அவர் பாடல்களை தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஹரீஷ் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். செல்வா சார் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. பிரவீன் சார் எனக்கு நல்ல ரோல் தந்ததற்கு நன்றி. விஷ்ணு விஷால் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்”என்றார்.  
 
நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியபோது, ” அக்டோபர் 31 எங்கள் படம் வருகிறது. என் தயாரிப்பாளர்  விஷ்ணு விஷால் சாருக்கு முதல் நன்றி. அவரை தயாரிப்பாளராகத்தான் முதலில் சந்தித்தேன். அவர் இவ்வளவு உழைப்பைப் போட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார். அவர் தந்த ஊக்கத்திற்கும் என்னை தேர்ந்தெடுத்ததற்கும் நன்றி. அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. செல்வா சாருடன் ஷீட்டில் எதிரில் உட்கார்ந்திருந்ததே பயமாக இருந்தது. அவர் மீது பெரும் மரியாதை உள்ளது. பிரவீன் அற்புதமான கதை சொல்லி. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். ஜிப்ரான் சாரிடம் பெரிய திறமை உள்ளது. அவர் பாடல்களை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். ஹரிஷ் நல்ல விஷுவல்ஸ் தந்துள்ளார்.  ஷான் சிறப்பாக எடிட் செய்துள்ளார். மானசா உங்களுக்கு அழகுடன் திறமையும் இருக்கிறது வாழ்த்துகள்.  உங்களுடன் நானும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். “என்றார். . 
 
இயக்குநர் பிரவீன் K. பேசியபோது, “இன்று நான் நானாக இருக்க காரணமான என் அப்பா அம்மா மற்றும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் எழுத்தாளர் மனு ஆனந்திற்கு நன்றி. எஃப் ஐ ஆர் படப்பிடிப்பின் போது உருவான கதை இது. எந்த ஒரு இயக்குநருக்கும் முழுதாக புரிந்து கொண்ட ஒரு நடிகன் கிடைப்பது வரம். எனக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விஷ்ணு விஷால் கிடைத்தது வரம். இந்தப்படத்தின் கதை கேட்ட தருணத்திலிருந்து அவர் இந்த கேரக்டரை, படத்தை எடுத்துச் சென்ற விதம் பிரமிப்பானது. இந்தக் கதையை ரவிதேஜா சார், அமீர் சார் என பல நடிகர்களிடம் எடுத்து சென்றோம். இதை இந்தியிலும் செய்வதாக இருந்தது. 
 
பல தடைகள் வந்த போதும் அவர் இப்படத்தை தாங்கினார். இதற்காக அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. இந்தப் படத்தை முழுதாக வேறு மாதிரி அணுகியிருக்கிறோம். ஷ்ரத்தா மிக திறமையானவர், அவர் தான் இந்த ரோலுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தார். சிறப்பாக செய்துள்ளார். மானசா நல்ல திறமைசாலி அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் இதன் தொழில்நுட்ப கலைஞர்கள். மிக திறமையானவர்களை தேர்ந்தெடுத்தேன், அவர்கள் அற்புதமான உழைப்பை தந்துள்ளனர். ஜிப்ரான், ஷான், ஹரீஷ், ஜெயச்சந்திரன் என எல்லோரும் அட்டகாசமாக செய்துள்ளனர். எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு சிறப்பான அனுபவம் தரும். “என்றார். 
 
இயக்குநர் செல்வராகவன் பேசியபோது, “விஷ்ணு விஷால் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவரைச் சந்தித்ததில்லை. அவர் என்னை சந்தித்து, படம் செய்ய வேண்டும் என அணுகி, அவருடன் வேலை பார்த்த போது தான், அவரைப் பார்த்து பிரமித்தேன். அவர் வீட்டுக்கே போக மாட்டார். எப்போதும் சினிமா தான். சினிமாவை காதலிக்கிற நேசிக்கிற, மதிக்கிற, ஹீரோ. அதே போல் இயக்குநர் பிரவீன், அவரும் அப்படித்தான். உங்களின் நேசிப்புக்கு நல்லதே நடக்கும். “என்றார். 
 
விஷ்ணு விஷால் பேசியபோது, “எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிக்கை நண்பர்கள்தான்.  க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் அதை தடுக்க முடியாது. எல்லா மொழியிலும் திரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். அதை மீற முடியாது. ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம். 
 
கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது. ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார். இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டு பாராட்டிய போது, எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. இந்தப் படம் தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன். பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. ரூட்டடாக எடுத்த படங்கள் தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம். இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள்  200 சதவீத உழைப்பை தந்துள்ளனர். என் மனைவி ஜுவாலா விற்கு நன்றி. ஒரு புது விஷயம் முயற்சி செய்துள்ளோம். நீங்கள் தரும் பாராட்டுக்கள்தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது. 
 
இந்தப் படம் பொறுத்தவரை செல்வா சார் தான் ஹைலைட். இப் படத்தில் நடித்தற்கு நன்றி சார்.  தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக,  உங்கள் உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததற்கு நன்றி.  ஷ்ரத்தா, எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர் தான் மனதில் வந்தார். படத்தின் முதல் 30 நிமிடம் அவர் தான் தாங்கியுள்ளார். மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார். எல்லாப் படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார், அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது. கருணாகரன் என் புரடக்சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார். ஆர்யன் என் பையன் பேர். அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. “என்றார்.  
 
நடிகர் விஷ்ணு விஷால் மகன் ஆர்யன் பேசியபோது, “, என்னுடைய அப்பா என் பெயரில் படமெடுத்துள்ளார். என் பெயரில் படம் வருவது எனக்கு பெருமையாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் திரையரங்கில் படம் பாருங்கள்.” என்றார் 
 
தொழில்நுட்ப குழு விபரம்  
தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்) 
எழுத்து  இயக்கம் –  பிரவீன் K 
மக்கள் தொடர்பு  – சதீஷ் (AIM)

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *