வட சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குப்பையும் குப்பை சார்ந்த பகுதியுமான ஒரு குப்பை மலை மற்றும் குப்பைக் காட்டில் ,
அம்மா அப்பா யார் என்று தெரியாத நிலையில் இந்த உலகததோடு சுய அறிமுகம் செய்து கொண்டு ,
ஓர் இட்லிக்கார ஆயாவின் கருணையால் வளர்ந்து அடிதடி ரவுடித்தனம், காசுக்காக கையை காலை எடுப்பது , கழுத்தை அறுத்துக் கொல்வது என்று வாழ்ந்து வரும் இளைஞன் அட்டு (ரிஷி) .
காசுக்காக ஆட்களை கொல்வது மட்டுமின்றி போதைப் பொருள் கடததலும் அந்த பகுதியில் உண்டு அட்டுவைச் சுற்றி அவனைப் போலவே சில நண்பர்கள் .
அட்டுவை சிறுவயது முதலே அறிந்த ஓர் இளம்பெண் (அர்ச்சனா ) அவனைக் காதலிக்கிறாள் . . ஆனால் அவளது தந்தைக்கோ , தன் மகள் காசுக்காக கொலை செய்யும் ஒரு நபரை
அட்டு குழுவுக்கும் மற்ற குழுக்களுக்கும் சண்டை வருகிறது . அதன் விளைவாக அட்டுவுகும் அவன் நம்பிய தாதாவுக்கும் மோதல் வருகிறது . ஒரு நிலையில் மறைந்து வாழ்ந்து பெரியவரிடம் தஞ்சம் புகுகிறான் அட்டு .
அங்கேயும் தன் நண்பன் ஒருவனின் நன்மைக்காக பெரியவரையே பகைக்கும் சூழல் வர , அப்புறம் அட்டு என்ன ஆனான் ? அவன் காதல் என்ன ஆனது ? என்பதே அட்டு .
படம் பார்த்து முடிந்த உடனே , ‘ வீட்டுக்குப் போய் சுடுதண்ணி வச்சு ரெண்டு துளி டெட்டால் விட்டு , ஹமாம் சோப்பு கதற கதற தேய்ச்சுக் குளிக்கணும் ‘ என்ற எண்ணம் வருகிறது .
காரணம், ஒரு மாபெரும் குப்பை மலைக் காட்டில் வெம்புழுதியில் , அழுக்கில் , எண்ணெய்ப் பிசுக்கில் , காடு போல முடி வளர்த்துக் கொண்டு,
நடிக நடிகையர் தேர்வு அருமை .
போபோ சசி இசையில் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம் பாடல் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது . பாமரத்தனம் நிறைந்த அந்த குரலும் பாடல் வரிகளில் உள்ள சென்னை கானா வாசனையும் சூப்பர் .
டிங் டிங் டிகானா பாடல் கமர்ஷியல் கைமா .
பின்னணி இசை பல சில இடங்களில் பக்குவம் இல்லாமல் இருந்தாலும் பொதுவில் அதிகம் கேட்டிராத ஒரு வித்தியாசத்தன்மையை கேட்க முடிகிறது . பாராட்டுகள் .
பவர் பாண்டியன் ஆசானின் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கின்றன .
இப்படி எல்லாம் மேக்கிங்கில் பார்த்து பார்த்து செய்தவர்கள் கதை திரைகதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
படத்தின் அடிப்படைக் கதையில் புதுமை எதுவும் இல்லை . பார்த்துச் சலித்த பல படங்களின் இன்னொரு காப்பிதான் . திரைக்கதையும் அப்படியே
கதாநாயகியின் தந்தை எடுக்கும் அந்த முடிவு மட்டும் வாழ்வியலை பிரதிபலிக்கிறது . பெரியவர் வீட்டில் நடக்கும் திருப்பமும் சபாஷ் போட வைக்கிறது ,
என்றாலும் அதன் விளைவு வழக்கமான ஒன்றாக முடிவதால் பலன் கம்மி
எல்லோரும் எல்லா வகையிலும் அயோக்கியர்கள் என்று கதை சொன்ன பிறகு யாருக்கு என்ன நடந்தால் நமக்கு என்ன என்ற உணர்வு வருகிறதே தவிர எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஆர்வத்தோடு தொடர முடியவில்லை .
கதாநாயகி கதாபாத்திரம் கூட ஏன்தான் இப்படி அலையுதோ என்ற உணர்வே ஏற்படுகிறது .
படமாக்கலில் வன்முறையை குறைத்து இருக்கலாம் .
இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி இருந்தால் ..
அட்டு … ஆகி இருக்கும் சூப்பர் ஹிட்டு !




