இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளரும் உடன் பிறந்த சகோதரருமான R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் அமுதவாணன் பேசியபோது, “பல மேடைகளில் பேசியுள்ளேன் ஆனால் இங்குப் பேசுவதற்குக் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, மேடையில் பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். கதாநாயகன் லியோ சிவக்குமார் படத்தில் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். ஷுட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் V J ஆண்ட்ரூஸ் பேசிய போது, “இங்கு மேடையில் உள்ள ஆளுமைகளின் படைப்பிற்கு மிகப்பெரிய ரசிகன் நான், அவர்களுடன் அருகில் அமர்வது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது, நான் ஒரு படத்தில் நடித்து, அதற்காக மேடையில் பேசுவது இதுவே முதல் முறையாகும். லியோ சிவக்குமார் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார், சஞ்சிதாவிடம் இருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டேன். இந்தப்படம் ஒரு சிறப்பான வெற்றியை பெரும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன்,”என்றார்.
நடிகை பானு , “இந்தப் படத்தில் நடிக்கும்போது ஒரு குடும்பத்தில் இணைந்த உணர்வு இருந்தது, அனைவரும் என்னை அக்கறையோடு பார்த்துக்கொண்டனர் , படம் அழகாக இருக்கிறது. உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்”என்றார்.
ஒளிப்பதிவாளர் அசோக்குமார் பேசியபோது, “வாய்ப்பளித்த விஜயகுமார் அவர்களுக்கு நன்றி. இப்படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.”என்றார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் ராஜகோபால் பேசியபோது, “Esthell Entertainer சார்பில் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். லியோனி சார் கொரோனா காலகட்டத்தில் இந்தக் கதையைக் கொண்டு வந்தார்.
ஜேவியர் பிரிட்டோ அவர்களும் இந்தக்கதையை மிகச்சிறந்த கதை என்றார். கதை பிடித்துப்போனதால் கொரோனா என்றாலும் பரவாயில்லை என தயாரிப்பில் இறங்கி விட்டோம். லியோ சிவக்குமார் மிக அருமையான கதாபாத்திரம் செய்துள்ளார். “என்றார்.
இயக்குநர் R விஜயகுமார் பேசியபோது, “இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர், அவரின் உடன் பிறந்த தம்பி நான், அவருடன் 4 படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கில், இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன். இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சார் அவர்களின் தீவிர ரசிகன் நான், அவர் என்னை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி.
கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசியபோது, “இந்த மேடை எனக்குக் கனவு , சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது, எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி, இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். , எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார், இந்த படம் எனக்கு முதல் படி அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் “என்றார்.
திண்டுக்கல் I லியோனி பேசியபோது, “கே எஸ் ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான் , என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன், இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள் , விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி, நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார், படக்குழு அனைவருக்கும் நன்றி, என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான், பல முயற்சிகள் செய்தான் அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.”என்றார்
தொழில் நுட்ப குழு
இசை – ரகு நந்தன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத்தமிழின்

