பாகுபலி இணை இயக்குனரின் ‘விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல்’

vin 1

சேலத்தில்  இருந்து சினிமா ஆசையில் கிளம்பிய ஒருவர் சென்னை வந்து,  அது சரி வராத நிலையில் ஹைதராபாத்துக்கு போய் தெலுங்கும் கற்று ,

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர்களின் படங்களில் பணி புரிந்ததோடு , 

எஸ் எஸ் ராஜ மவுலியின் முக்கிய உதவியாளராக பாகுபலியில் பணி புரிந்து இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம் . 
அதுவும் ராஜ மவுலி எதற்கெடுத்தாலும் தன்னையே அழைக்கும் அளவுக்கு மிக முக்கிய உதவியாளராகவும் உயர்வது எவ்வளவு பெரிய விஷயம் . 
அப்படி சாதித்தவர்தான் பழனி.  இப்போது அவர் பெயரே பாகுபலி பழனி 
vin 6
ஆபாவாணன் படைத்த செந்தூரப்  பூவே படத்தை தெலுங்கில் படைத்து பெரும்புகழ் பெற்றவர் கிருஷ்ணா ரெட்டி. இதனால் இவரது பெயரே செந்தூரப் பூவு கிருஷ்ணா ரெட்டி ஆனது  .
அந்த கிருஷ்ணா ரெட்டி தயாரிக்க , அவரது மகன் நாக அன்வேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆக, நேகா பட்டேல் நாயகியாக நடிக்க ,
மேற்படி நம்ம பாகுபலி பழனி தமிழ் தெலுங்கு மொழிகளில் இயக்கும் படம் ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட முன்னோட்டத்தில் பூலோகத்துக்கு வரும் பெண்ணுடனான இளைஞனின் காதல் கலவரம் என்று கதை போவது தெரிந்தது . 
நாகா அன்வேஷ் அழகாக இருக்கிறார் சிறப்பாக நடனம் ஆடுகிறார் நடிப்பும் வருகிறது . 
vin 4
நிகழ்ச்சியில் பேசிய பலரும் நாகா அன்வேஷை பாராட்டினார்கள் . பழனியை கொண்டாடினார்கள் . 
பல வெற்றிப் படங்களின் வசன கர்த்தாவான பிரபாகர் பேசும்போது ” எத்தனையோ படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன் .
பிரபாகர்
பிரபாகர்

ஆனால் இந்தப் படத்துக்கு நான் பணி புரிந்தது என்னால் மறக்க முடியாத அனுபவம் .

அப்படி ஒரு மிகச் சிறந்த படம் இது ” என்று உணர்வுப் பூரவ்மாகப் பாராட்டினார் 
தயாரிப்பாளர் செந்தூரப் பூவு கிருஷ்ணா ரெட்டி ” இப்போது தமிழ் டெக்னீசியன்கள் இல்லாமல் ஒரு தெலுங்குப் படம் கூட உருவாவது இல்லை .
தமிழ்ப் படங்களில் உள்ள கலாச்சார சிறப்பு செண்டிமெண்ட் குடும்ப உறவின் மேன்மை எங்கள் தெலுங்கு மக்களுக்கு மிகவும் பிடிக்கிறது .
எனவே தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் ஆகி வரும்போது பிரபல தெலுங்கு ஹீரோக்களே தங்கள் படங்களின் வெளியீட்டை தள்ளி வைப்பார்கள் . 
எனவே தமிழ்ப் படங்கள் , தமிழ் டெக்னீசியன்கள் மீது எனக்கு  மிகப் பெரிய மரியாதை உண்டு . அப்படிப்பட்ட நிலையில் ,
கிருஷ்ணா ரெட்டி
கிருஷ்ணா ரெட்டி

தமிழ்நாட்டில் இருந்து வந்து தெலுங்கு இண்டஸ்ட்ரியில் மிகப் பெரிய மரியாதை பெற்ற பழனி மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு . 

ராஜ மவுலி செட்டுக்கு வந்த உடனே பழனியைத்தான் தேடுவார் . எது என்றாலும் பழனியை கூப்பிடு என்றுதான் அவர் வாயில் வரும் 
அப்படிப்பட்ட பழனி என்னிடம் ஒரு முறை ‘சொர்க்கம் என்றால் என்ன ?’  என்று ஒரு விளக்கம் சொன்னார் . என்னால் அந்த சிந்தனையில் இருந்து பல மாதங்கள் வெளிவர முடியவில்லை . 
அதான் இந்தப் படமாக வருகிறது . இது ஒரு சோஷியோ ஃபாண்டசி படம் ” என்றார் . 
நாயகன் நாகா தனது பேச்சில் ” என் அப்பா தமிழ் சினிமாவை நேசிப்பது ஆச்சர்யம் இல்லை . ஆனால் என் அம்மா இன்னும் ஒரு படி மேலே.  
நாயகன் நாகா
நாயகன் நாகா

நான் ஏதாவது தெலுங்குப் படத்தை டிவியில் பார்த்துக் கொண்டு இருந்தால் ரிமோட்டைப் பிடுங்கி எதாவது தமிழ்ப் படத்தை வைத்து ” நல்ல நடிப்புன்னா என்னன்னு தெரியணும்னா தமிழ்ப் படம் பாரு”ன்னு  சொல்வாங்க .

அப்ப இருந்தே எனக்கு தமிழ் சினிமா மேல அவ்ளோ ஆசை . இப்ப நான் தமிழில் அறிமுகம் ஆவது ரொம்ப சந்தோசம்” என்றார் .
மிக நெகிழ்வாகப் பேசிய பழனி “கல்யாணம் ஆகி பல வருடங்கள் நான் ஹைதராபாத்திலும் என் மனைவி தமிழ் நாட்டில் என் சொந்த ஊரிலும் பிரிந்தே  இருந்தோம் .
நான் படம் இயக்குவது  முடிவான பிறகுதான் சென்ற வருடம் மனைவியை ஹைதராபாத் அழைத்துக் கொண்டேன் . ராஜ மவுலி சார் என்னை மிக நன்றாக அன்பாக முக்கியத்துவம் கொடுத்து வைத்துக் கொண்டார் .
இயக்குனர் பாகுபலி பழனி
இயக்குனர் பாகுபலி பழனி

இந்தப் படம் ஆரம்பிச்ச போது தயாரிப்பாளர் கிருஷ்ணா சாரிடம் பல  பேர் இயக்குனராக நம்ம ஆட்களை போடக் கூடாதா ? தமிழ் ஆளைத்தான் போடணுமா என்று கேட்டார்கள் .

ஆனால் கிருஷ்ணா சாரோட மனசு மாறல.பழனிதான் டைரக்டர் . அவர்தான் என் மகனை ஹீரோவா அறிமுகப்படுத்தணும்னு சொன்னார் .
 என் வாழ்நாளில் அதை  மறக்க மாட்டேன் என்னிக்கும் நன்றியோடு இருப்பேன்” என்றார் .
vin 2
பழனியின் அம்மா அப்பா , மனைவி , அண்ணன் , மற்றும் குடும்பத்தார் மேடையில் கவுரவிகப்பட்டபோது அரங்கமே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தது 
நெகிழ்வு ! மகிழ்வு !!
வெற்றிக்கு வாழ்த்துகள் !!!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *