குழலி @ விமர்சனம்

முக்குழி பிலிம்ஸ் சார்பில் கே பி வேலு , ஜெயராமன், ராமச்சந்திரன் தயாரிப்பில் விக்னேஷ்,  ஆரா  மகா , செந்தி, ஷாலினி நடிப்பில் சேரா கலையரசன் இயக்கி இருக்கும் படம். 

 
கிராமத்தில் உயர் சாதிப் பெண்ணுக்கும் (ஆரா) தாழ்த்தப்பட்ட சாதியிலேயே கொஞ்சம் பெரிய ஆளான ஒருவரின்  மகனுக்கும் ( விக்னேஷ்) காதல். 
 
பல வருடங்களுக்கு முன்பு உயர் சாதி நபர் ஒருவன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்துக் கர்ப்பமாக்க ,  அந்தக் காதலை உயர் சாதி  ஆட்கள் ஏற்காததோடு சம்மந்தப்பட்ட பெண்ணின் அப்பாவை நாயை விட்டுக் கடிக்க வைத்து  அவமானப்படுத்தி  விடுகிறார்கள் . அந்த விசயத்தில் உயர்சாதி ஆட்களிடம் பேசி நியாயம் பெறப் போராடவில்லை என்று நாயகனின் அப்பா மீது சக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோபம்.
இந்த சூழலில் இந்தப் புதிய காதலைக் கண்டு பிடிக்கும் அந்த தாழ்த்தப்பட்ட சமூக சக நபர் ஒருவன் , பெண்ணின் தாய்மாமாவிடம் போய் , ”அப்போ ஏமாந்துட்டோம் இந்த முறை விட மாட்டோம் . இந்தக் காதல் நிறைவேற வேண்டும்” என்று கொடி பிடிக்க, விஷயம் பெண்ணின் அம்மாவுக்கும் உறவுகளுக்கும் சாதிக்காரர்களுக்கும்  தெரிய வர, மருத்துவராகும் கனவோடு காதலித்த அந்தக் காதல் ஜோடிக்கு என்ன ஆச்சு என்பதே குழலி . 
 
அக்கறையான முயற்சி . 
 
கிராமியப் பழக்க வழக்கக் கலாச்சாரங்களை காட்சிகளில் இணைத்து இருக்கும் விதம் அழகு . 
 
அழுத்தமான காட்சி அமைப்பு மற்றும் இயக்கம் . நிறைய கிராமிய மனிதர்களை யதார்த்தமாக நடிக்க வைத்து இருக்கிறார் . ஆரா, செந்தி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். 
உதயகுமாரின் பாடல் இசையும் பின்னணி இசையும் அருமை . 
 
சமீரின் ஒளிப்பதிபும் சிறப்பு . 
 
எண்பதுகள் தொண்ணூறுகள் பாணியிலான படமாக்கலும் அர்த்தமற்று அலை பாய்ந்து சிதறும் திரைக்கதையும் பெரும் குறைகள். சாதிப் பிரச்னையில் முழுக்க முழுக்க அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்கள். அதுவும் ஒரு நிலையில் வித்தியாசமாக ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று நம்ப வைத்து ஏமாற்றியது குறை 
 
அந்தக் கால பாணியில் ஒரு படம் பாக்கணும் என்போர்க்கு வாய்ப்பு 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *