பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில்இருந்து கண்டுபிடித்த
சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்களின் அரிய கலைகள், சித்துகளை
சாமானிய மனிதர்கள் கைகொள்ளும் போது ஏற்படும் விளைவுகள் பற்றிய கதை அமைப்பில் ஒரு படம் வருகிறது.
பரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அரசர் ராஜா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு,
ஹீரோவாகவும் அறிமுகமாகும் அந்தப் படம் ‘ பயங்கரமான ஆளு’
ஹீரோயின்களாக ரிஷா, சாரா ஆகியோர் நடிக்க,
இவர்களுடன் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல முன்னணி
நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கேரளா, வேலூர், ஆரணி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றதோடு, வேலூரில் உள்ள பூச்சாண்டிகுப்பம் என்ற
காட்டுப் பகுதியில் உள்ள பழைய பிரெஞ்சு கோட்டை ஒன்றிலும் படமாக்கப்பட்டுள்ளது. மிக பழமையான இந்த கோட்டையில்
சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையிலான படமாக இருந்தாலும், காதல் காமெடி என்று கமர்ஷியலாக உருவாகியிருக்கும்
‘பயங்கரமான ஆளு’ வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.