பரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து , கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇயக்கியிருப்பதோடு,
இரட்டை வேடத்தில் அரசர் ராஜா என்பவர் நாயகனாக நடிக்க, ரிஷா, சாரா, கஞ்சா கருப்பு, போண்டா மணிஆகியோர்,
நடித்து இருக்கும் படம் பயங்கரமான ஆளு . எவ்வளவு பயங்கரம் ? பேசலாம்.
சித்தர்கள் கூடு விட்டுக் கூடு பாய்வதை நேரடியாக படம் பிடித்து ஒளி பரப்புவதற்காக
மூன்று ஆண்கள் மூன்று பெண்கள் கொண்ட குழு ஒன்று , அடர்ந்த காடுகளைக் கடந்து சித்தர்கள் வாழும் மலைக்கு போகிறது .
அவர்களின் தலைவன் சிவா ( அரசர் ராஜா 1)
அங்கே ஒரு சித்தரைக் கண்டுபிடித்து கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை படம் பிடிப்பதோடு சிவாவும் அதை கற்றுக் கொள்கிறான் .
இன்னொரு பக்கம் மலை அடிவார கிராமம் ஒன்றில் வாழும் இசக்கி என்ற இளைஞன் (அரசர் ராஜா 2)
பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி அனுபவித்துக் கை விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான் .
ஏமாந்த ஒரு பெண் இறந்த நிலையில் அவளது தங்கையான குருவி என்ற பெண்ணையும் (ரிஷா ) ஆசை வார்த்தை கூறி அனுபவிக்கிறான் .
சிவாவுடன் வந்த ஒரு பெண்ணை (சாரா) கூட வந்த மற்ற இரு ஆண்கள் கற்பழிக்க முயல ,
அதற்கு மற்ற இரு பெண்களும் உதவ , அதை எதிர்க்கிறான் சிவா .
எனவே அவனை அடித்து உதைத்துக் கொன்று உடலை எரிக்கின்றனர் .
அக்காவை ஏமாற்றி அவள் சாவுக்குக் காரணம் ஆனதோடு தன்னையும் அனுபவித்து விட்டு,
திருமணம் செய்து கொள்ள மறுக்கும் இசக்கியை விஷம் வைத்துக் கொள்கிறாள் குருவி.
சிவா கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவன் என்பதால் அவனது உயிர் இசக்கியின் உடலை எடுத்துக் கொண்டு,
தன்னை கொன்றவர்களை பழிவாங்க முயல்கிறது .
ஆவியின் ஆசை நிறைவேறியதா ? இல்லையா என்பதே இந்த பயங்கரமான ஆளு படம் .
எளிய படம் . உற்சாகமாக எடுத்து இருக்கிறார் அரசர் ராஜா
சுதிர் அலிகான் இசையில் வரும் சாவுக்குத்து பாடல் கவனிக்க வைக்கிறது . பின்னணி இசை தஷி .
சித்தர் என்பதே தமிழ் இன விஷயம்தான் . அப்படி இருக்க சித்தரை மலையாளியாக காட்டியது ஏன் ?
சித்தர் சம்மந்தப்பட்ட விசயங்களை நிறைய சொல்லி இருக்கலாம்
காடும் மலையும் அருவியுமான லொக்கேஷன்கள் மிக மிக சிறப்பு .
படத்தின் மிக சிறந்த அம்சம் இதுதான் .