புரூஸ்லீ @விமர்சனம்

bruce 6

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் , லிங்க பைரவி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன்ஆகியோர் தயாரிக்க, 

ஜி வி பிரகாஷ் குமார்  இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க,  ஜோடியாக கிரீத்தி கார்பன்டா நடிக்க , இயக்குனர் பாண்டிராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய, 
பிரஷாந்த் பாண்டியராஜ்  இயக்கி இருக்கும் படம் புரூஸ் லீ . இந்த புரூஸ்லீ யாரை உதைக்கிறான் . பார்க்கலாம்.ஆங்கில காட் பாதர் படத்தில் வரும் ஹீரோ மாதிரியான லுக்கில் திரியும் ஒரு அப் நார்மல் தாதா (முனீஸ் காந்த் ராமதாஸ்),

அமைச்சர் மன்சூரை (மன்சூர் அலிகான்) சுட்டுக் கொல்கிறான் . மன்சூரின் தீவிர தொண்டனான  ஓர் இளைஞன் ( ஜி வி பிரகாஷ் குமார் ) அதை போட்டோ எடுத்து விடுகிறான் .

bruce 5

அவனது காதலி (கிரீத்தி கார்பன்டா ),  குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்கிறாள் . ஆனால் புரூஸ்லீ என்ற பட்டப் பெயர் இருந்தும் ,

பயந்தாங்குளியாக இருக்கும் தொண்டனுக்கு போலீஸ் என்றால் ரொம்ப பயம். ஆனாலும் காதலி உறுதியாக இருக்கிறாள்தொண்டனின் நண்பனும் மன்சூரின் இன்னொரு தீவிர தொண்டனுமான இளைஞனும் (பால சரவணன் ) இவர்களோடு இருக்கிறன் . அவனுக்கு ஒரு காதலி .

புகைப்பட ஆதாரத்தை சரியான யாரிடமாவது ஒப்படைக்க எண்ணி இந்த ஜோடிகள் எடுக்கும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை .

காரணம் இவர்கள் பார்க்கும் நபர்கள் எல்லாம் தாதாவுக்கு வேண்டிய ஆட்களாகவே இருக்கிறார்கள் .bruce 7

இது தவிர , தாதாவின் ஆள் ஒருவன் உருவாக்கிய ஒரு டைம்பாம்,  தயாரிப்புக் குறைபாடு  காரணமாக எப்போது வேண்டுமானாலும் டைமர் ஓடும் .

எப்போது வேண்டுமானாலும்  ஆஃப் ஆகும் என்ற நிலையில் நாயகனின் காருக்குள் விழுந்து விடுகிறதுதாதாவை சட்டப்படி தண்டிக்க நினைக்கும் காதல் ஜோடிகளின் முயற்சி என்ன ஆனது ? படு மொக்கையான…….. டைம் பாமுக்கு என்ன ஆனது என்பதே புரூஸ் லீ .

படத்தில் டைட்டில்கள் போடப்படும் விதம் அட்டகாசமாக அபாரமாக அசத்தலாக இருக்கிறது . டைட்டில்கள் போடப்படும் விதம் மட்ட்ட்டும்!

அதுக்கு மட்டும் எல்லாம் படம் பார்க்க முடியுமா என்ன ?

கடமைக்கு எழுதப்பட்ட கதை,  அக்கறையின்றி அமைக்கப்பட்ட திரைக்கதை , சளசளவென்று வெட்டியாய்க் கொட்டும் வசனங்கள் என்று….  ஒரு வழி பண்ணி விடுகிறார்கள் .

Bruce Lee Movie Stills

அடுத்தடுத்து டுவிஸ்டு என்று எண்ணிக் கொண்டு என்னென்னமோ சொல்கிறார்கள் . ஆனால் அதில் ஓர் ஒழுங்கு, லாஜிக் , யதார்த்தம்,  சீரியஸ்னஸ் அல்லது காமெடி வேண்டாமா ?

நினைத்ததை எல்லாம் எழுதி எடுத்து ஒட்டிக்  கொடுத்தால் எப்படி ?

எல்லாவற்றையும் வளவள என்று வசனத்துலேயே பேசி விடலாம் என்றால் அப்புறம் கேமரா எதற்கு ?

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆகி விட்டால் கூட மன்னிக்கலாம் .  ஆனால் குரங்கு பிடிப்பதற்கே குறி வைத்து அதுவும் கோணவாயன் குட்டியாகப் போன  கொடுமையை என்ன சொல்ல ?

இதுவரை பார்த்த படங்களில் எல்லாம் என்ன மாதிரி பேசி என்ன மாதிரி ஆடினாரோ அப்படியே இதிலும்  ஜி வி பிரகாஷ் .

ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கதை இருக்கும் . அதற்கேற்ப கேரக்டர் இருக்கும் . அதற்கும் ஏற்ப நடை உடை பாவனை உடல் மொழிகள் வேண்டும் அல்லவா ? பாடல்களும் இசையும் கூட படு சுமார்  ரகமே.

bruce 4

அந்த பொண்ணு பேர் என்ன …? க்ரீத்தி  கார்பன்டரோ பிளம்பரோ … உற்சாகமாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு ஓவராக படு செயற்கையாக குதிக்கிறார் .

ஒரு ஏரியாவில்  நம்மை சுற்றி எல்லாருமே மெண்டலாக இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஓர் மன நிலையை தருகிறது திரைக்குள் தெரியும் உலகம் .

ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் , நான் கடவுள் ராஜேந்திரன் என்று நடிகர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் . ஆனாலும் காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு ….. .நோ யூஸ் !

ஒரு பத்து நிமிஷம் மனசார நெகிழ்ந்தோம் அல்லது சிரித்தோம் அல்லது பயந்தோம் அல்லது ரசித்தோம் அல்லது கிறங்கினோம் என்று சொல்ல,  ஒரு சந்தர்ப்பம் கூட மொத்தப் படத்திலும்  இல்லை என்பதுதான் கொடுமை .

புரூஸ் லீ , புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……லீ !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *