முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்க, பாயல் ராஜ்புத், ஸ்ரீ தேஜ் , அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ் , லக்ஷ்மன் நடிப்பில் அஜய் பூபதி எழுதி தயாரித்து இயக்கி தெலுங்கில் மங்கள்வார் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம்
அம்மா இறந்த நிலையில் மற்றொரு கல்யாணம் செய்து கொண்டு அப்பா கவனிக்காமல் போய்விட, அம்மாயியின் ஆதரவில் வளரும் சிறுமி… குடிகார அப்பனுக்கு மகனாகப் பிறந்து கஷ்டப்படும் சிறுவன்… இருவருக்கும் நேசம் .
ஆனால் காலம் அவர்களை சேர்த்து வைக்கவில்லை. . குடிகார அப்பன் வீடு பற்றி எரிய, மகனோடு சேர்ந்து இருவரும் எரிந்து போனதாக ஊர் கதற , உடைந்து போகிறாள் சிறுமி .
பல வருடங்களுக்குப் பிறகு அந்த கிராமத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கள்ளக் காதலில் இருக்கும் ஆண் பெண் ஜோடிகளை சுவரில் எழுதி வைத்து யாரோ அம்பலப்படுத்த, சம்மந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வாரம் ஒரு கள்ளக்காதல் ஜோடி
சிறுவனும் சிறுமியும் வணங்கிய மாலட்சுமி என்ற பெண் தெய்வம்தான் இப்படி செய்வதாக பேச்சு. ஆனால் போலீஸ் வருகிறது . ஒரு டாக்டர் ஊரில் ஒரு பேயைப் பார்த்ததாக சொல்கிறார் .
இந்த இடத்தில் ஒரு அட்டகாசமான கதையை இறக்கி அசர அடிக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி
பார்க்கும் நபருடன் எல்லாம் படுக்கும் பெண்ணை, செக்ஸ் வெறி பிடித்த கேவல ஜென்மம் என்று பொதுவாக நினைப்பது வழக்கம் .
ஆனால் சிறுவயது முதலான கஷ்டங்கள், சிறு வயதிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவது போன்ற காரணங்களால்அதீத செக்ஸ் ஆசை எனும் நிம்ப்ஃபோமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அது விஸ்வரூபம் எடுக்காத வரை வாழ்ந்து,
ஒருவனைக் காதலித்து அவன் அனுபவித்து விட்டு , விட்டுவிட்டுப் போய்விட, மனம் ஒடிந்து
அப்படி நடந்து கொண்டு நிம்ப்ஃபோமோனியா நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு , அந்த உணர்வு அதீதமாகும் போது, பார்க்கும் நபருடன் எல்லாம் செக்ஸ் வைத்துக் கொண்டு ,
செக்ஸ் முடிந்ததும் ஒழுக்கம் பற்றிய குற்ற உணர்ச்சியால் துடித்துத் தவிக்கும் ஒரு பெண்ணின் ( பயல் ராஜ்புத்) கதையும் அந்த கதைப் போக்கும் வியக்கவும் நெகிழவும் வைக்கிறது
அதற்கேற்ப காதல் உணர்வு, கவர்ச்சி நெகிழ்ச்சி என்று எல்லா உணர்வுகளையும் தூண்டக் கூடிய முகம் , உடல் அமைப்பு, உருக்கமான நடிப்பு என்று அந்தக் கதாபாத்திரத்துக்கு அற்புதமாக நியாயம் செய்திருக்கிறார் பாயல் ராஜ்புத். அற்புதம்
கிளைமாக்ஸ் பகுதியில் ஊர் ஜமீன்தார் மனைவி பற்றிய டுவிஸ்ட்டும் அபாரம்
தாசரதி சிவேந்திரா வின் ஒளிப்பதிவு இருட்டுக்கு உயிர் கொடுக்கிறது
தனது அட்டகாசமான பின்னணி இசையால் படத்துக்கு யானை பலம் சேர்த்து இருக்கிறார் அஜனீஷ் லோக்நாத்.
மற்ற பல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை எல்லாம் குறைத்து விட்டு , அந்த பெண்ணின் கதை விஷயத்தில் இன்னும் ஆழம் சேர்த்து இருக்கலாம் என்றாலும் ,
இப்போதும் படத்தின் கதையும் பாயல் ராஜ்புத்தின் நடிப்பும் பிரமிக்க வைக்கிறது .
செவ்வாய் கிழமை … சம்பவம்