மார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோகரன் தயாரிக்க, யாஷிகா ஆனந்த், அவி தேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, கண்ணன், மொசக்குட்டி நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ஜெனித் குமார் இயக்கி உள்ள படம் .
சில வருடங்களுக்கு முன்பு செத்துப் போன தோழி, அவள் காதலனுடன் (கணவன்?) வந்து மிரட்டுவதாக, கணவனிடம் சொல்லி விட்டு , தற்கொலைக்கு முயல்கிறாள் ஓர் இளம் மனைவி (யாஷிகா)
ஒரு நிலையில் அந்தக் கணவனும் அந்த தோழியை அவளது காதலனுடன் பார்க்கிறான் . தன் நண்பன் ஒருவனிடம் அவன் உதவி கேட்க,
அவன் சாமியார் ஒருவரை அழைத்து வரப் போன நிலையில் , பயந்து அலறி தனது காதலியிடம் உதவி கேட்க, காதலி தன் போலீஸ்கார அண்ணனிடம் உதவி கேட்க,
எல்லோரும் இளம் தம்பதியின் வீட்டுக்கு வர, செத்துப் போன ஜோடியை பார்த்த எல்லோரும் செத்து இருப்பார்கள் அல்லது செத்துப் போவார்கள் என்பது தெரியவரும் நிலையில் நடந்தது என்ன என்பதே படம்
படத்தில் ஒரு சம்பவம் நடந்தது பற்றி எல்லோரும் பேசுகிறார்கள் . பேசும் ஒவ்வொரு முறையும் விட்ட இடத்தில் இருந்து தொடராமல் , “அன்னிக்கு வெள்ளிக்கிழமை … ” என்ற முதலில் இருந்து ஆரம்பித்து பேசுகிறார்கள் .
“நான் கேட்ட பைலை எடுத்துவா என்று சொன்னால் போய் எடுத்து வருபவர் இந்தாங்க நீங்க கேட்ட பைல் என்கிறார் . இயக்குனர் ரேடியோ நாடகப் பிரியரோ என்று தோன்றுகிறது .
படத்தில் வரும் போலீஸ்காரரின் மெயின் பிசினஸ் மளிகைக் கடையாக இருக்கும் போல. ” ஏ.. கோயம்பேடுக்கு போயி சாமான் போட்டுட்டு வாரேன், என்ன?” என்ற ரீதியிலேயே பேசுகிறார் .
திவ்யாவாக வரும் சக்தி மகேந்திரா அழகு . குரல் தேன்.
பக்குவம் இல்லாத வசனம், படமாக்கல், இயக்கம், எல்லாம் படுத்தி எடுத்தாலும் கதை அட்டகாசமான பேய் படத்திற்கான ஒன்று. . . அதே போல படத் தொகுப்பும் (எலிசா) பிரம்மாதம்
முக்கால்வாசி கோட்டை விட்டு விட்டு, கடைசியில் கோட்டை கட்டுகிறாள் சைத்ரா.