இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் நிலையில்,
படத்தின் 75 ஆவது நாள் வெற்றி விழா , நன்றி அறிவிப்பு விழாவாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜ, அபினேஷ் இளங்கோவன்
படத்தை வெளியிட்ட டிரீம் ஃபேக்டரி சக்திவேல்
”நான் சக்தி பிலிம் பேக்டரி என்கிற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
இதுபோன்ற சிறந்த கதைக்களங்களுடன் கூடிய படத்தை சிறந்த முறையில் ரசிகர்களுக்குக் கொண்டு செல்ல தயாராக இருக்கிறேன் ” என்றார்
அபினேஷ் இளங்கோவன் பேசும்போது
“டைரக்ஷன் பண்ணுவது இவ்வளவு சுலபமா என்று கார்த்திகே நரேன் மூலம்தான் அறிந்து கொண்டேன்… ஆனால், கதை பண்ணுவதில் தான் அதிக மெனக்கட வேண்டும் . ” என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. தனது பேச்சில் ” தமிழ் நாட்டில் திரைப்படத்துறை வளர்ச்சிக்கென்று பிரத்யேக வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை…
திரையுலகிற்கும் அரசுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது… முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் திரையரங்குகள் கட்டிவதற்கான அனுமதி கிடைப்பதில் பல சிக்கல் இருக்கிறது…
இதுவே இந்தப்படம் தெலுங்கில் வெளியாகியிருந்தால் இந்தத் தயாரிப்பாளர் இன்னொரு 10 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பார்…இங்கே, படத்தின் லாபம் வேறு யாரோ ஒரு சிலருக்குப் போகிறது…” என்றார்.
”சிறந்த படத்தைக் கொடுத்ததற்கு கார்த்திக் நரேனுக்குத்தான் நாம் நன்றி சொல்லவேண்டும்… அவருடைய அடுத்த படமான நரகாசுரனில் தயாரிப்பில் இணைவதில் பெருமை..” என்றார் கெளதம் வாசுதேவ மேனன்.
நடிகர் ரகுமான்பேசும்போது “ஒரு சிறந்த படத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு கார்த்திக் நரேனுக்கு நன்றி” என்றார்.
தவிர, படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில் நுட்பக்கலைக்கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றியையு. மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.
நிறைவாக நிறைவோடு பேசிய கார்த்திக் நரேன், ” ஜில் ஜங் ஜக் படத்தில் பணியாற்றிக்கொண்டே தனியாகப் படம் இயக்குவதற்குத் தயாராகிவிட்டேன்…
என்னை நம்பி யாரும் முதலீடு செய்ய முன்வராத நிலையில், ஊரில் இருக்கும் அப்பாவிடம் அப்பா நான் படம் இயக்கவேண்டும் என்றால் எனக்கு வயது ஆகவேண்டும் போல என்று கூறி வருத்தப்பட்டேன்..
சரி நீ படம் ஆரம்பிக்கவேண்டிய வேலையை ஆரம்பி, நானே தயாரிக்கின்றேன் என்று சொன்னார்…
அப்பா என் மீது வைத்த அந்த நம்பிக்கைதான் இந்த அளவு வெற்றியில் கொண்டு வந்து விட்டிருக்கின்றது… தொடர்ந்து சிறந்த படங்கள் இயக்குவேன்” என்று கூறினார்.
படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக்கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், என்று அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது ரொம்ப நாளைக்குப் பிறகு நடந்த நிகழ்வு.








