அனுகிரஹதா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் உமா சங்கர் தயாரிக்க , கணேஷ் வெங்கட் ராமன், ஸ்வேதா மேனன் , சுகன்யா ஈரோடு மகேஷ் ஆகியோர் நடிக்க,
ஷங்கர் மற்றும் சுரேஷ் இணைந்து இயக்கி இருக்கும் படம் இணையதளம் .
ஏற்கனவே பாக்யராஜ் , ஜெயராம் நடிக்க, விவேகானந்தன் என்பவர் இயக்கிய துணை முதல்வர் படத்தை தயாரித்த நிறுவனம் இது . சங்கரின் துணைவியார் உமா சங்கர். சங்கர் ஒரு ஆடிட்டர்
சுரேஷ் இன்று போய் நாளை வா படத்தை உருவாக்கிய கோபிநாத்தின் மகன் . தயாரிப்பாளர் கே ஆர் ஜி இவருக்கு சித்தப்பா .
படத்தின் பாடல் வெளியீட்டு விழா, அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்னோட்டததையும் பாடல்களையும் திரைடிட்டனர் .
இணைய தளக் குற்றங்களை பற்றி பல நவீன விசயங்களோடு முன்னோட்டம் அமைந்து இருந்தது .
பிரபல பட்டி மன்றப் பேச்சாளரும் இலக்கிய எழுத்தாளருமான மரபின் மைந்தன் முத்தையா இந்தப் படத்தில் முதன் முதலாக வசனம் மற்றும் எல்லா பாடல்களையும் எழுதி உள்ளார் .
அரோல் கரோலி இசையில் அமைந்த பாடல்கள் தெளிவாக இருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய, இயக்குனர்களில் ஒருவரான சங்கர்,
” முற்றிலும் புதுமையான கதையை எடுத்துக் கொண்டு 28 நாளில் படத்தை முடித்தோம் .
கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும் அரோல் கரோலியின் இசையும் சிறப்பாக வந்துள்ளது . கணேஷ் வெங்கட் ராமன் மற்றும் ஸ்வேதா மேனன் இருவரும போலீஸ் அதிகாரிகளாக வருகிறார் .
ஈரோடு மகேஷை காமெடியாகப் பார்க்க வேண்டும் என்றால் டி வி யிலேயே பார்க்கலாம் சினிமா தேவை இல்லை . எனவே அவர் கேரக்டர் காமெடி இல்லை .
எஜமான் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசை அரோல் கரோலி.
முத்தையா இலக்கியத்தின் சிறப்புகளையும் படத்தின் கதைக்கேற்ற நவீனத் தன்மையோடு வசனம் மற்றும் பாடல்களில் கொடுத்துள்ளார்.
ஜூன் ஜூலை மாத வாக்கில் படம் திரைக்கு வரும் ” என்றார் .
இயக்குனர் சுரேஷ் பேசும்போது,
“இன்று இணையதளம் , வாட்ஸ் அப் இவை தவிர்க்க முடியாதவையாக ஆகி விட்டன .ஆனால் இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் .
இவற்றால் நன்மைகள் இல்லவே இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் தனி மனித வாழ்வில் இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் . குற்றங்கள் பெருக இவையே காரணம் .
நம்ம ஊரில் சைபர் கிரைம் என்ற காவல் துறை இருக்கிறது . ஆனால் முழுமையாக இல்லை . சைபர் கிரைம்களில் இருந்து தப்புவது மிக சுலபம் .
எனவே எல்லோரும் பயப்படாமல் இணைய வசதிகளை தவறாக பயன்படுத்துகின்றனர்
எனவே இணைய வசதிகளைப் பயன்படுத்துவோர் செய்ய வேண்டியதுஎன்ன ? செய்யக் கூடாதது என்ன ?என்பதை விழிப்புணர்சிக்க்காக சொல்லும் அதே நேரம் கமர்ஷியலாகவும் படத்தை உருவாக்கி உள்ளோம்’ என்றார் .
தயாரிப்பாளர் உமா சங்கர் தன் பேச்சில் ” சமூகத்துக்கு மிக முக்கியமான விசயத்தை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம் . எல்லாக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள் ” என்றார் .
ஈரோடு மகேஷ்,
” படத்தில் எனக்கு ஜோடி இருக்கு பாட்டு கூட இருக்கு ” என்றார் .
“இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த ஒத்துழைப்பே சசிறப்பாக ஒளிப்பதிவு செய்ய உதவியது” என்றார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா .
“இது எனக்கு மூன்றாவது படம் .
மரபின் மைந்தன் முத்தையாவின் சிறப்பான பாடல்வரிகளுக்கு இசை அமைத்தது சந்தோஷமாக இருந்தது ” என்றார் இசை அமைப்பாளர் அரோல் கரோலி.
மரபின் மைந்தன் முத்தையா பேசும்போது,
” இணையத்தில் நல்லதும் உண்டு கேட்டதும் உண்டு . நல்லதுக்கு பயன்படுத்துங்கள் கெட்டதுக்கு வேண்டாம் என்று இந்தப் படம் சொல்கிறது .
இணையத்தை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எல்லையை நியாயாமாக நாமே வகுத்துக் கொள்ள வேண்டூம் என்பதை படம் சொல்கிறது .
இருமல் மருந்தை ஒரு டீ ஸ்பூன் சாப்பிட்டால் இருமல் நிற்கும் . நிறைய ஒரே முத்தாகக் குடித்தால் போதை வரும். இணையமும் அப்படித்தானே என்பதை இந்தப் படம் சொல்கிறது .
இதை செய்தியாக சொல்லாமல் சேதியாக சொல்கிறது . தவிர இந்தப் படத்தில் நல்ல பாடல்களையும் எழுத முடிந்தது . ” என்றார்
கணேஷ் வெங்கட் ராமன் தன் பேச்சில்
” நல்ல கன்டன்ட் உள்ள படங்கள்தான் ஓடும் என்பது இந்தப் படத்தின் இயக்குனர்கள் ஷங்கர் — சுரேஷ் இருவரின் கருத்து .
அதற்கேற்ப படத்தை உருவாக்கி உள்ளனர் .மிக நல்ல கதை . நல்ல ஸ்கிரிப்ட். படம் சிறப்பாக வந்துள்ளது . எனக்கு மிக நல்ல கேரக்டர். ஸ்வேதா மேனன் சிறப்பாக நடித்துள்ளார் .
படம் சுவாரஸ்யமாக இருக்கும் ” என்றார்.







