ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் வழங்க கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணாதாஸ் ஜோடியாக நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது.
டாடா என்பது டாடி என்ற சொல்லின் செல்லமான வடிவம் . தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தில் நாயகனை அப்படித்தான் அழைத்தது
கல்லூரியில் படிக்கும்போதே கல்யாணம் செய்து கொள்ளும் ஒரு காதல் ஜோடிக்கு பிள்ளை பிறக்க, அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதை சொல்லும் படம் இது . ஒரு அப்பா தன் மகளை நல்ல பிள்ளை என்று நினைக்க படிக்கும்போதே அவள் கர்ப்பமாக அதன் விளைவுகள் என்ன என்பதே இந்தப் படம் .
நடக்குற பிரச்னைக்கு எல்லாம் காரணம் இந்த அப்பனுங்க தான்டா என்ற ஒரு வசனத்தோடு படத்தின் முன்னோட்டம் முடிகிறது
படத்தின் முன்னோட்டமும் பாடல் ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டது
ஆஷிக் AR-ன் பாடல் வரிகளில் , ஜென் மார்டினின்‘ இசையில் டாடா படத்தின் பாடல்களான ’, ‘நம்ம தமிழ் ஃபோக்’ சமீபத்தில் வெளியான ’கிருட்டு கிருட்டு’ ஆகியவை வெளியாகி உள்ளன.
படத்தில் யுவன் ஷங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார் .
ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
: