லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிக்க, ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது .
விழாவுக்கு முதல்நாள் லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சுபாஷ்கரன் . உடன் இயக்குனர் மணிரத்னம் .
ஈழத்தில் சுபாஷ்கரன் வழங்கும் உதவிகள் பற்றி சில ஈழத் தமிழர்கள் , கர்நாடகத் தமிழ் அமைப்பினர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணி ரத்னம் , ” சுபாஷ்கரன் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை கேட்ட போது, வியப்பாக இருந்தது . அதை வைத்து ஒரு படமே எடுக்கலாம் ” என்றார் .
இதன் பிறகு நிகழ்ச்சிக்கு வந்த இயக்குனர் முருகதாஸ் , ” கையில் இருந்த பையை ஓர் ஆற்றின் ஒரு கரையில் விட்டு விட்டு நீந்தி மறு கரையை அடைந்து உழைத்து முன்னேறிய அனுபவங்களுக்கு சொந்தக்காரர் சுபாஷ்கரன். அவரது வாழ்க்கை சம்பவங்களை படமாகவே எடுக்கலாம் ” என்று கூற, கூட்டத்தில் கலகலப்பு .
ஒரு வழியாக விஷயத்தை யூகித்த முருகதாஸ் , ” ஓ .. மணி சாரும் அப்படியே சொல்லி இருக்கிறாரா ? அதனால் என்ன பல படங்களை உருவாக்கும் அளவுக்கு வியப்பான அனுபவங்கள் சுபாஷ்கரனின் வாழ்வில் உண்டு . எண்பத்தி ஆறு வயதான அவரது தாயை வெளிநாட்டுக்கு கொண்டு போக அவர் பட்ட கஷ்டங்களை மட்டுமேகூட ஒரு தனி படமாக எடுக்கலாம் ” என்றார்.
மறுநாள் தர்பார் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உலள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது .
நிகழ்ச்சியில் பேசிய லாரன்ஸ் ” ரஜினி சார் இந்த வயசில் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரது நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் ” என்றார் .
யோகிபாபு பேசும்போது, ” எனக்கு சீக்கிரம் கல்யானம நடக்கப் போகிறது . ரஜினி சாருடன் நடித்தது முக்கியமான நிகழ்வு ” என்றார் .
“நிலாவைப் பார்த்து சோறு உண்ட குழந்தை வளர்ந்ததும் நிலாவுக்கே போவது போல , ரஜினியை திரையில் பார்த்து வளர்ந்தவன் அவரை இயக்கும் பெருமை பெற்றேன் ” என்றார் இயக்குனர் முருகதாஸ் .ரஜினிகாந்த் தனது பேச்சில், ” பாலச்சந்தர் சார் என்னை நடிக்க வைக்கும் போது நான் சினிமாவில் நல்ல நடிகனாக வருவேன் என்று நம்பினார் . நான் அந்த நம்பிக்கையை காப்பாற்றினேன் . அதே போல , என் ரசிகர்கள் என் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் ” என்றார் .
விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.