தில் ராஜா @ விமர்சனம்

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில் கோவை பாலசுப்பிரமணியம் தயாரிக்க, விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, ஞான சம்மந்தன் நடிப்பில் ஏ, வெங்கடேஷ் திரைக்கதை எழுதி நடித்து இயக்கி இருக்கும் படம். 

அமைச்சரின்  ( எ .வெங்கடேஷ்) ஆணவ அயோக்கிய மகன் நண்பர்களுடன் சேர்ந்து கலாட்டா செய்ய அதில் ஒரு ஆர்க்கிடெக்ட் ( விஜய் சத்யா) அவன் மனைவி (ஷெரின்) ஆகியோர் பாதிக்கப்பட அதன் விளைவாக நடக்கும் சம்பவங்களால் அந்த அயோக்கிய மகன் கொல்லப்படுகிறான். 

ஆர்க்கிடெக்ட்டின்  மாமியார் , அமைச்சர் மனைவியின் (வனிதா விஜயகுமார்) தோழியாக இருக்க, எதிர்பார்த்த சந்திப்பில் ஆர்க்கிடெக்ட், மனைவி மகள், மாமனார் (ஞானசம்பந்தன்)  மாமியார் ஆகியோர் அமைச்சர் வீட்டுக்குப் போக , அங்கே சில உண்மைகள் வெளிப்பட என்ன நடந்தது என்பதே படம். 

படத்தின் இசை அமைப்பாளரான அம்ரேஷ் விஜய் சத்யாவோடு சேர்ந்து ஆடிப் பாடி இருக்கும் முதல் பாடல்  ரகளை. 

சற்றே ஜெயம் ரவி போன்ற தோற்றத்துடன் இருக்கிறார் விஜய் சத்யா . குரல் பெரிய பலம் .  சண்டைக் காட்சிகளில் சிறப்பாக செய்து இருக்கிறார். ஹீரோவாக நிலைக்க சிக்ஸ் பேக் மட்டும் போதாது . நடிப்பும் வேண்டும் . 

சூப்பர் சுப்பராயனின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பு . 

இமான் அண்ணாச்சி பாலா காமெடி காட்சிகள் பலனும் இல்லை பழுதும் இல்லை . 

இன்னும் சிறப்பான கதை திரைக்கதை  இருந்திருக்கலாம் . 

தில்ராஜா .. ராஜா இருக்கிறார் .. தில் எங்கே?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *