சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் ஃபாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து,
படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா.
”சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. ‘தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற இந்த படத்துலயும் கொடுக்கணும்.
படத்துக்கு என்ன தேவையோ அதைத் தயங்காமல் பண்ணுங்க’னு பெரிய தெம்பைக் கொடுத்தார் .
படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன்.
ஒளிப்பதிவாளர் ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. .
அனிருத் சின்ன பையன், ஆனால் பெரிய திறமையாளர். கதையை புரிஞ்சிக்கிட்டு சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார்.
நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் சென்சிட்டிவான படமாகதான் இருக்கும்.
அந்த அளவுக்கு பக்குவமான நடிகையாகி இருக்கிறார்.
ஃபகத் பாசில், அரவிந்த்சாமி போன்ற மிகச்சிறந்த நடிகர்களை என் படங்களில் இயக்கியதில் நான் பெருமைப்படுகிறேன்.
1989ல் ஒரு தொட்டில் சபதம் படத்தில் இருந்து சினிமாவில் இருந்து வருகிறேன். நிறைய பேரிடம் ஆலோசித்துதான் படங்களை எடுத்து வருகிறேன். 14 உதவி இயக்குனர்கள், 2 ஆராய்ச்சிக் குழுக்கள், எழுத்தாளர்கள் சுபா ஆகியோருடன் நிறைய வவாதித்து அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டுதான் இரண்டு படங்களையும் உருவாக்கியிருக்கிறேன்.
சமூகத்திடம் கேட்க நினைத்த கேள்விகளை இந்த படத்தில் கேட்டிருக்கிறேன். 20 வருடங்களாக என் மனதுக்குள் இருந்த கேள்விகளை கேட்க, தகுதியை வளர்த்துக் கொண்டேன். மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து கேட்டிருக்கிறேன்.
பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம்.
சினிமா தரும் எண்டர்டெயின்மெண்டை விட நியூஸ் சேனல்கள் தரும் சமூக பிரச்சினைகள், அரசியல் அவலங்கள் குறித்தவற்றை சொல்லும் என்டர்டெயின்மென்ட்தான் இப்போது அதிகம். என்னை நம்பி கொடுத்த இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காக மட்டுமே படம் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.
‘யாரும் தப்பை விரும்பி பண்றதில்ல, ஜெயிக்கறதுக்காகதான் பண்றாங்க, நன்மை ஜெயிக்கும்னு நிரூபிச்சா நன்மையை விரும்பி பண்ணுவாங்க’னு ஒரு வசனம் இருக்கு. அது தான் உண்மை.
ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. பரீட்சார்த்தமான படங்களின் பட்ஜெட் எப்போதும் 5 கோடிக்குள்தான் இருக்கும்.
ஆனால் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.
இங்கு நினைத்த படங்களை செய்ய யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. தயாரிப்பாளர், ஹீரோ ஆகியோரை திருப்திப்படுத்த படங்கள் படம் எடுத்து,
ஒரு மேடை அமைத்த பிறகுதான் நாம் நினைத்ததை எடுக்கும் உரிமை கிடைக்கிறது
வேலைக்காரர்களின் கோணத்தில் நின்று முதலாளித்துவத்தின் குறைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.
இந்த சமூகத்தில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருகிறேன்.
கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்து விட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்த படத்துக்கு பிறகு அது நடக்கும்.
சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாக மட்டும்தான் அமைய வேண்டும் என நினைக்கிறேன்” என்றார் மோகன் ராஜா .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462