டான் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் மற்றும் எஸ் கே புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவா கார்த்திகேயன்,  எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கும் படம். 

ஏட்டுப் படிப்பு வராத – வாழ்வில் என்ன ஆவோம் என்றும் புரியாத-  கடைசி பெஞ்ச் மாணவனை,   அவனுக்கான தேடலை அவனே கண்டடைய விடாமல்-  படி படி என்று அப்பாவும் , அதே போல மிலிட்டரித்தனமாக கல்லூரியும்  செய்து கசக்கி பிழிந்தால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகளும் விளைவுகளுமே படம். 

மாணவனாக சிவ கார்த்திகேயன், அப்பாவாக சமுத்திரக்கனி, கல்லூரியின் முகமாக எஸ் ஜே சூர்யா காதலுக்கும் ஆட்டம் பாட்டத்துக்கும் பிரியங்கா அருள்மோகன் .மாணவர்களுக்கு பிடித்த விசயத்தை பேசும் படம். சிவகார்த்திகேயன் பொருத்தமாக ஜொலிக்கிறார் . 
எஸ் ஜே சூர்யா அதகளம். குரல் நடிப்பு அபாரம் . சமுத்திக்கனி வெகு யதார்த்தம் 

மாணவனின் அம்மாவாக ஆதிரா, நண்பர்களாக ஷிவாங்கி, மிர்ச்சி விஜய் , கல்லூரி ஆட்களாக முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான்   ,ஆகியோரும் இருக்கிறார்கள் .

பின்னணி இசையில் அசத்தல் அனிருத் . பாடல்களும்  ஒகே . தொழில் நுட்ப ரீதியாக சிறப்பான படம் . கதை நுட்பம்?

தேவைக்கு மேலான  நீளம், எந்தத் தரப்பையும் தெளிவாக எடுத்து வைக்காத  குழப்பம், காமெடி போதாமை , சாதரணமாக கடக்கும் காட்சிகள் ஆகியவை  குறைபாடு . ஏழ்மை அப்பன் பிள்ளையிடம் ஒரு நிமிடம் கூட அன்பாக பாசமாக பேசக் கூடாதா என்ன ?

ஒரு காட்சியில் ஒருவர் பேசிய வசனத்தை இன்னொரு காட்சியில் இன்னொருவர் பதிலுக்கு ரிப்பீட் செய்வது சுகம் தரும் திரைக்கதை உத்தி. ஆனால் அது அளவுக்கு மீறி வருகிறது . படத்தின் முதல் காட்சியில் கொடுக்கும் பில்டப் கடைசியில் புஸ்வானம் . 

டான் …. முன்பே தெரிந்த உள்ளூர் ரவுடி  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *